Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 23-07-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கூடமலை துணை மின்நிலையம் பராமரிப்பு பணி 

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை. 

மின்தடை பகுதிகள் : கூடமலை, விஜயபுரம், கணவாய்காடு, நரிப்பாடி, 74.கிருஷ்ணாபுரம், நினங்கரை, மண்மலை, கடம்பூர், பாலக்காடு, கூலமேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது.

தலைவாசல் துணைமின் நிலையம் பராமரிப்பு பணி 

ஆறகளூர், மணிவிழுந்தான் வடக்கு, ஆரத்தி அகரம், வேப்பம்பூண்டி, மணிவிழுந்தான் தெற்கு, புளியங்குறிச்சி, பட்டுத்துறை, சித்தேரி, நாவக்குறிச்சி, தலைவாசல், சிறுவாச்சூர், இலுப்பநத்தம், ஊனத்துார், சாத்தப்பாடி, புத்துார், சார்வாய், நாவலுார், தென்குமரை, தியாகனுார், தேவியாக்குறிச்சி,காமக்கா பாளையம், மணிவிழுந்தான் காலனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

பூலாம்பட்டி துணை மின்நிலையம் பராமரிப்பு பணி

புதுப்பட்டி, கோனேரிப்பட்டி, வேட்டுவப்பட்டி, பூமணியூர், பொன்னம் பாளையம், கல்வடங்கம், செங்கானுார், கொட்டாயூர், கரியனுார், ஒக்கிலிப்பட்டி, சுள்ளிமுள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:  சேலம், அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் ஸ்டேட் பாங்க் அருகே நாளை 23.07.205 காலை 11:00 மணி முதல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. தெற்கு கோட்டத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர் பங்கேற்று, மின் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.