• இன்று பதிவு செய்தால் 15 ஆண்டுகள் காத்திருக்கணும்! சபரிமலை படி பூஜை நேரத்தில் வரும் மாற்றம்!


கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். மேலும் படிக்க..



  • முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி அரசியலில் பரபரப்பு


மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான். பண மோசடி வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின், கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர், டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். மேலும் படிக்க..



  •  தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் நாளில் மாற்றம்.. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன?


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஐந்து மாநில தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. நக்சல்களின் தாக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் படிக்க..



  • பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் அதிரடி திட்டம்.. போட்டு உடைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா 


உலகின் மிகப்பெரிய எல்லை பாதுகாப்பு படையாக இந்தியாவின் பிஎஸ்எஃப் உள்ளது. இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் வீரர்கள் சேவையாற்றி வருகின்றனர். கடந்த 1965ஆம் ஆண்டு, டிசம்பர் 1ஆம் தேதி, இந்திய - பாகிஸ்தான் போரின்போது, எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் எல்லை பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது. எல்லை பாதுகாப்பு படையின் சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி, அதன் தொடக்க நாள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டின் தொடக்க விழா ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நடைபெற்றது. மேலும் படிக்க..



  • காலநிலை உச்சி மாநாடு.. இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி


மாறி வரும் காலநிலையால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஐநா சபையின் காலநிலை உச்சி மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான காலநிலை உச்சி மாநாடு துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய மாநாடு வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் படிக்க..