இறுதிகட்டத்தை நோக்கி கர்நாடக தேர்தல்.. இன்று மாலையுடன் நிறைவுக்கு வரும் தேர்தல் பிரச்சாரம்..
கர்நாடாக சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு 224 சட்டமன்ற தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாகவே அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
கேரள படகு விபத்தில் 22-ஆக உயர்ந்த உயிரிழப்பு.. முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று நேரில் ஆய்வு
கேரள மாநிலம் மலப்புரம் தனூரில் நேற்று மாலை சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். ஒட்டும்புரம் தூவல் தீரம் என்ற இடத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு இந்த படகு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படகு உரிமையாளர் மீது ஜாமீன் இல்லா பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படகு முதலில் சாய்ந்து பின்னர் தலைகீழாக கவிழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேலும் படிக்க
- விமான கட்டணங்கள் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பயணிகள்..
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான Go Frist திவாலானதாக அறிவித்ததை அடுத்து, விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி டெல்லி-லே வழித்தடத்தின் வழக்கமான கட்டணம் ரூ.4,772 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.26,819 ஆக உயர்ந்துள்ளது. சண்டிகர்-ஸ்ரீநகருக்கு வழக்கமான கட்டணம் ரூ.4,745 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.26,148 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை கோடை விடுமுறையாலும் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மேலும் படிக்க
- மகளிர் மட்டுமே பங்கேற்கும் குடியரசு தின அணிவகுப்பு - மத்திய அரசு மாஸ்
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் இந்த அணிவகுப்பில் அடுத்தாண்டு பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராணுவம் மற்ற பிற துறைகளில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் படிக்க
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. சுமார் 21 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க