• அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை...4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு


உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 2023 ஏப்ரல் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 8.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். மேலும் படிக்க



  • தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - காரணம் என்ன?


விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம்  நாளை (மே 5) வெளியாகிறது. கேரளாவைச் இந்து மற்றும் கிறிஸ்தவ  பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் ட்ரெய்லரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்துக்கு தடை விதிக்குமாறு  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை  அணுக உத்தரவிட்டுள்ளனர். மேலும் படிக்க




  • இழுத்து மூடப்படும் 'Go First' விமான சேவை!




வாடியா குழுமத்திற்குச் சொந்தமான Go First விமான சேவையை நிறுத்தப்போவதாகவும், திவால்நிலைத் தீர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு மே 3 முதல் மே 5 வரை மூன்று நாட்களுக்கு அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைச் சமர்ப்பிக்க, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க




  • மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகையை ரத்து செய்ததன் மூலம் வருவாயை அள்ளிய ரயில்வே துறை 




கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், மூத்த குடிமக்களுக்கான சலுகை நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் வழங்கக்கோரி கோரிக்கைகள் எழுந்தாலும் தற்போதுவரை அது வழங்கப்படவில்லை. 2022-23 நிதியாண்டில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்கப்படாததன் மூலம் கூடுதலாக 2,242 கோடி ரூபாய் உள்பட மொத்த வருவாயாக 5,062 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.  மேலும் படிக்க



  • ஆன்லைன் மோசடி: பணத்தை இழந்த 39 சதவீத இந்திய குடும்பங்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!


இந்தியாவில் பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் சிலர் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனிடையே டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான லோக்கல் சர்க்கிள்ஸ்  மேற்கொண்ட ஒரு ஆய்வில், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 39 சதவீத குடும்பங்கள் ஆன்லைன் பணமோசடியை சந்தித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.  மேலும் படிக்க