7 AM Headlines: என்ன நடந்தது நேற்றைய நாளில்..? நிமிடத்தில் அறிந்து கொள்ளலாம் வாங்க! இன்றைய தலைப்பு செய்திகள்!

Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு:

Continues below advertisement

  • தொழில்துறை முதலீடு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ரூ.35,000 கோடிக்கு அனுமதி
  • தென்கிழக்கு வங்கக்கடலில் 7, 8ம் தேதியில் காற்றழுத்தம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
  • ஆருத்ரா இயக்குநரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ. 13 கோடி பெற்ற ஆர்.கே. சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம்: சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு
  • புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ஆன்லைன் மூலம் நுகர்வோர் இழப்பீடு பெறலாம் : மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல் 
  • பட்டியலினத்தவரின் சாதி சான்று விவகாரத்தில் உண்மைத்தன்மை குறித்து ஆராய அதிகாரமில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று  (மே 4) முதல் ஆரம்பவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
  • காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் 37 மணி நேரமாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.
  • நடிகர் சரத் பாபு இறந்து விட்டதாக வெளியான தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அவரது சகோதரி கூறியுள்ளார்.
  • பல்பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தது சிபிசிஐடி காவல்துறை
  • தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மனோபாலா மரணத்திற்கு திரை பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா:

  • பத்ம விருதுகளை பெற்ற ஹலக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த துளசி கவுடா, சுக்ரி பொம்மு கவுடா ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.
  • இந்தியாவின் நற்பெயரை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
  • கர்நாடகவில் பாஜகவிற்கு ஆதரவான அலை வீசுவதாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
  • வாக்காளர்களை கவரும் வகையில் பெங்களூருவில் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி 6-ந்தேதி பிரமாண்ட ரோடுஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் நான்கு மாதங்களில இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை கோரிய மற்றொரு வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது. 
  • இந்தியாவில் ஆன்லைன் பணமோசடியில் இந்த ஆண்டு சுமார் 39 சதவீத குடும்பங்கள் பாதித்ததாக ஆய்வில் தெரியவந்தது.

உலகம்:

  • சீனாவில் ரிக்டர் 5.2 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
  • உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பால்சிங் பங்கா, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
  • பனாமா எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரான் கடற்படை சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • ஒரே இரவில் ட்ரோன் தாக்குதல் மூலம் புதினை கொல்ல உக்ரைன் முயற்சித்ததாகவும் ஆனால், அது தோல்வி அடைந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
  • பாகிஸ்தானில் பணவீக்கமானது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு: 

  • பஞ்சாப்  கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
  • சென்னை மற்றும் லக்னோ இடையிலா போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  • ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
  • காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளில் கே.எல். ராகுல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement