• சீனாவில் வேகமெடுக்கும் நிமோனியா காய்ச்சல்! 5 மாநிலங்கள் அலெர்ட்... தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?


சீனாவில்  நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. அண்டை நாடான சீனாவில் தற்போது எச்9என்2 எனும் சுவாச பிரச்னை ஏற்படுத்தும் நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வடக்கு சீனாவில் ஏரளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் இந்த வகை காய்ச்சலால் எளிதாக பாதிக்கப்படுகின்றனர். நிமோனியா பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..



  • தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு? - தொடங்கியது வாக்குப்பதிவு..


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவானது தொடங்கியுள்ளது. அங்கு யாருக்கு மக்கள் ஆதரவு அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 பிரதான கட்சிகள் இடையே அங்கு பலத்த போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது. மேலும் படிக்க..



  • டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு ரூல்ஸ்! இனி இப்படிதான் சிம் கார்டு வாங்கமுடியும்..இல்லன்னா அபராதம்!


சமீப காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை வழங்குவது, அதன் மூலம் பண மோசடி செய்வது போன்ற குற்றங்கள் தொடர் கடையாகி வருகின்றன. இந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல விதிமுறைகளை கொண்டு வந்ததோடு, மொபைல் சிம் கார்டுகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள 67,000 டீலர்களை அரசாங்கம் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும், மோசடியாகப் பெறப்பட்ட 52 லட்சம் சிம் கார்டு இணைப்புகளை அரசாங்கம் கண்டறிந்து செயலிழக்கச் செய்தது. மேலும் படிக்க..



  • "இறுதியா எங்க அழுகுரல் சாமிக்கு கேட்டிருச்சி" சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் கொண்டாட்டம்


உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டுப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள், நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த 17 நாள்களாக மீட்பு படையினர் மேற்கொண்டு வந்த தொடர் முயற்சிகளின் காரணமாக தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டனர். தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என ஒட்டு மொத்த நாடே பிரார்த்தனை மேற்கொண்டது. மீட்கப்பட்ட செய்தியை கேட்டு தொழிலாளர்களின் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சி விட்டனர். சிக்கிய தொழிலாளர்களில் மூவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர் ராஜேந்திர பேடியா, சுக்ராம் மற்றும் அனில் என தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க..



  • புல்லட் ரயில் தொடர்பாக அடுத்தடுத்து அப்டேட்.. மக்களை குதூகலத்தில் ஆழ்த்திய ரயில்வே அமைச்சர்


ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதி வேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும். எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிக வேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் படிக்க..