Morning Headlines July 30:
வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டிஎஸ் – சாரை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பிஸ்எல்வி-சி56 இஸ்ரோவின் 90வது விண்வெளி திட்டமாகும்.மேலும் வாசிக்க..
மணிப்பூர் பழங்குடி பெண்கள் விவகாரம்..
மணிப்பூரில் குக்கி சோ பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டை உலுக்கி வருகிறது. ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட பழங்குடியின பெண்கள், பின்னர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஏற்கனவே, 6 வழக்குகளை பதிவு செய்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக, 10 பேரை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு சிபிஐ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.மேலும் வாசிக்க..
ராணுவத்தின் சிறப்பு படையில் சேர எந்த பெண்ணும் தகுதி பெறவில்லை
பாதுகாப்பு படையின் சிறப்பு பிரிவில் சேர இதுவரை எந்த பெண்ணும் தகுதி பெறவில்லை" என பதில் அளித்துள்ளார்."எந்தவொரு பாலின பாரபட்சமும் இல்லாமல், இந்திய ஆயுதப் படைகளில் பணிபுரியும் பெண் அதிகாரிகள், சிறப்புப் படைகளில் தாங்களாகவே முன்வந்து சேர அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் தரத் தேவைகளை (QRs) பூர்த்திசெய்ய வேண்டும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.மேலும் வாசிக்க..
ராகுல் காந்தி திருமணம் - சோனியா பதில்
கடந்த ஜூலை 8-ஆம் தேதி, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகளை சந்தித்து, ராகுல் காந்தி உரையாடல் நடத்தியிருந்தார். விவசாயிகள், ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உரையாடல் அவரது யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. உரையாடலின்போது, பிரியங்கா காந்தி வீட்டுக்கு உணவு உண்ண வரும்படி பெண் விவசாயிகளுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார்.
டெல்லிக்கு சென்ற அந்த பெண்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்தனர். அப்போது, அதில் ஒரு பெண், ராகுல் காந்தியின் திருமணம் குறித்து சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "நீங்க ஏன் என் பையனுக்கு ஒரு பொருத்தமான பொண்ண பாக்கக்கூடாது?" என பதில் கேள்வி எழுப்பினார். மேலும் வாசிக்க..
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் முதுமலையில் 114 புலிகளும், சத்தியமங்கலத்தில் 85 புலிகளும் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலக புலிகள் எண்ணிக்கையில் 75 சதவிகிதம் இந்தியாவில்தான் இருக்கின்றன.இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளதாக இந்திய வன உயிரின ஆய்வு மையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 785 புலிகள் உள்ளன. இதனை அடுத்து, கர்நாடகாவில் 563, உத்தர காண்டில் 560, மகாராஷ்டிராவில் 444, கார்பெட்டில் 260, பந்திப்பூர் 150, நாகர்ஹோல் 141, பாந்தவ்கர் 135, துத்வா 135 புலிகள் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.மேலும் வாசிக்க..
தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சர்வதேச புலிகள் தினத்தில் புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதும் புலிகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக ஜூன் 29-ம் தேதி சர்வதேச உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 2010-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் மாநாட்டில் இந்த முடிவானது எடுக்கப்பட்டு வருடாவருடம் அனுசரிக்கப்படுகிறது. உலக புலிகளின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% புலிகள் இந்தியாவில் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் வாசிக்க..
இந்தியாவின் சாபமாக மாறும் புற்றுநோய்..!
புற்றுநோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்து வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரிவித்துள்ளது. புற்றுநோய் இறப்புகளை எடுத்துக்கொண்டால், 2020ல் 7 லட்சத்து 70 ஆயிரத்து 230 பேரும், 2021ல் 7 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேரும், 2022ல் 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 பேரும் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் 93 ஆயிரத்து 536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க..
புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு என்னாச்சு?
மேற்குவங்கத்தின் முன்னாள் முதலமைச்சரான புத்ததேவ் பட்டாச்சார்யா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சுத் திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் வாசிக்க..