Tiger Population:  தமிழ்நாட்டில் முதுமலையில் 114 புலிகளும், சத்தியமங்கலத்தில் 85 புலிகளும் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 


அழிவின் விளிம்பில் இருந்த புலிகள்:


இந்தியாவின் தேசிய விலங்காக இருப்பது புலி. உணவு சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப் பெருக்கத்தை தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கிய காரணியாக விளங்கும் நிலையில், புலிகள் பல்வேறு நெருக்கடியை எதிர்கொள்கின்றன. நிலவியல் ஏற்படும் மாற்றத்தாலும், மனித ஆக்கிரமிப்புகளாலும், வனப்பகுதி சுருங்குவதாலும் புலிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் போன்றவை கூட புலிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.
இதுபோன்று, பல்வேறு காரணங்களால் புலிகள் இறப்பு தொடர் கதையாகி வருகிறது. புலி மாநிலம் என்று அழைக்கப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்தாண்டு 34 புலிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை அளித்திருந்தது. இதையடுத்து, கர்நாடகாவில் கடந்தாண்டு 15 புலிகள் உயிரிழந்திருக்கின்றன.  இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறது.  


இன்றைய நிலை என்ன? 






இன்று உலகளாவிய புலிகள் தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், உலக புலிகள் எண்ணிக்கையில் 75 சதவிகிதம் இந்தியாவில்தான் இருக்கின்றன. இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளதாக இந்திய வன உயிரின ஆய்வு மையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 785 புலிகள் உள்ளன. இதனை அடுத்து, கர்நாடகாவில் 563, உத்தர காண்டில் 560, மகாராஷ்டிராவில் 444, கார்பெட்டில் 260, பந்திப்பூர் 150, நாகர்ஹோல் 141, பாந்தவ்கர் 135, துத்வா 135 புலிகள் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.  2018ஆம் ஆண்டு மத்திய பிரசேதத்தில் புலிகளின் எண்ணிக்கை 526 ஆக இருந்த நிலையில், தற்போது 785ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டின் நிலை? 


தமிழ்நாட்டில் முதுமலை முகாமில் 114 புலிகளும், சத்திய மங்கலத்தில் 85 புலிகளும் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 51 புலிகள் காப்பகங்களில், தமிழ்நாட்டின் முதுமலை, ஆனைமலை உட்பட 12 காப்பகங்கள் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.




மேலும் படிக்க 


Rahul Gandhi Marriage: "நீங்க ஏன் என் பையனுக்கு ஒரு நல்ல பொண்ண பாக்க கூடாது?" மூதாட்டியிடம் உரிமையுடன் கேட்ட சோனியா காந்தி