தமிழ்நாடு:



  • பாஜகவில் உள்ள வாரிசுகளின் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் பதவி விலகிவிடுவார்களா - அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி 

  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு குடோனில் வெடி விபத்து - 9 பேர் பலி

  • சர்வதேச புலிகள் தினம்- புலிகளை பாதுகாக்க உறுதியேற்போம் என் முதலமைச்சர் ஸ்டாலின்  உறுதி 

  • மேற்கத்திய தத்துவங்கள் மக்களைப் பிரிக்கின்றது - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு இணையத்தில் கடும் விமர்சனம் 

  • தமிழ்நாட்டில்  மொஹரம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  • நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை - எந்த வகையிலும் பாமக பொறுப்பேற்காது என அன்புமணி ராமதாஸ் கருத்து 

  • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணிகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் - திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் 

  • விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சென்னையில் ஆகஸ்டு 15 ஆம் தேதி சத்தியாகிரக போராட்டம் - விவசாய சங்கம் அறிவிப்பு

  • வேளாங்கண்ணி ஆலய திருவிழா மற்றும் ஓணம் பண்டிகை காரணமாக ஆகஸ்ட் 23, 30 மற்றும் செப்டம்பர் 6 ஆம் தேதி திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் இயக்கம் 

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 


இந்தியா:



  • மகாத்மா காந்தி குறித்து அவதூறு - இந்து அமைப்பு தலைவர் சம்பாஜி பிடே மீது வழக்குப்பதிவு 

  • எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மணிப்பூர் பயணம் வெற்று நாடகம் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு 

  • பொது சிவில் சட்டம் தொடர்பாக இதுவரை 80 லட்சம் பேர் கருத்து - சட்ட ஆணையம் தகவல் 

  • 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

  • புதிய தேசிய கல்விக்கொள்கை ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய மரியாதை அளிக்கும் - பிரதமர் மோடி கருத்து 

  • ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் 

  • அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு


உலகம்: 



  • ஆஸ்திரேலியா-அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சி- ஆஸ்திரேலியாவின் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 வீரர்கள் மாயம் 

  • பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை - பசிலுஸ்தான் முதலமைச்சர் நெய்லா குட்வாரி கருத்து 

  • தாய்லாந்து பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து - 9 பேர் பலி 

  • போர் குறித்த விஷயத்தில் உக்ரைனும், ரஷ்யாவும் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும் - எலான் மஸ்க் கோரிக்கை 

  • சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு தூக்குத்தண்டனை  

  • ‘எச்-1 பி’ விசா குலுக்கல் விரைவில் நடத்தப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் முகமை அறிவிப்பு 


விளையாட்டு: 



  • இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி 

  • பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசிலை முதல் வெற்றியை பதிவு செய்த  பிரான்ஸ்

  • ஆஷஸ் தொடருக்குப் பின் சர்வதேச போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு 

  • ஸ்பெயின் ஹாக்கி தொடரில் இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய பெண்கள் அணி