INDIA Alliance Meet President: மணிபூர் விவகாரம்.. குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் ’இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள்


கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் சென்ற 21 எம்.பி.க்கள் குழுவுடன், ’இந்தியா’ எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவர்களையும் இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 11.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின் போது, ​​மணிப்பூரில் இனக்கலவரத்தால் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ள நிலை குறித்தும், அம்மாநிலத்தில்  இயல்பு நிலையை கொண்டு வர எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குடியரசுத் தலைவருடன் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசவுள்ளனர். மேலும் படிக்க,


Manipur Violence: மணிப்பூர் வன்முறை: 6,532 எஃப்ஐஆர் பதிவு...இதுவரை என்ன செய்தீர்கள்? - உச்சநீதிமன்றம் கேள்வி


மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. கடந்த ஜூலை 20ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, "இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்" என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் எச்சரித்திருந்தார். மேலும் படிக்க,


டெல்லி அரசு அதிகாரிகள் மசோதா - மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. கடும் எதிர்ப்பு


டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதானை மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த மசோதா தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று பேசினார். மேலும் படிக்க,


Parliment Monsoon Session: நம்பிக்கையில்லா தீர்மானம்.. 10 ஆம் தேதி பதிலளிக்கிறார் பிரதமர் மோடி...! முழு விவரம் உள்ளே..!


மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒரு விஷயம் மணிப்பூர் விவகாரம்தான். மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் பெரும் கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதுதொடர்பான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர், தொடங்கியது முதலே அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது.மேலும் படிக்க,


Love Marriage: கதிகலக்கத்தில் காதலர்கள்: இனி காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கட்டாயம்? வருகிறது புதிய சட்டம்?


இன்றைய இளைஞர்கள் பெரும் அளவில் காதல் திருமணமே செய்து கொள்கின்றனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த காதல் திருமணம் வெற்றி பெறுகிறது என்றால் அது கேள்விக்குறி தான். காதலிக்கும்போது நம்முடைய முடிவே இறுதி என்று தோன்றும். ஆனால் கல்யாணம் என்று வரும்போது நம் சமூக சூழ்நிலையில், இரு குடும்பங்கள் ஒத்துக்போக வேண்டியிருக்கிறது. காதலித்து அடுத்த கட்டமாக திருமணத்திற்கு போக நினைக்கும் ஒவ்வொரு காதலர்களும் சாதி, மதம், குடும்ப அந்தஸ்து, குடும்ப மரியாதை, குடும்ப சூழ்நிலை என்று நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.  இதுபோன்ற காரணங்களால் காதல் திருமணங்கள் கைகூடுவதில்லை. மேலும் படிக்க,


லாலு மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்… அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை!


ரயில்வேயில் வேலை வாங்கித் தர நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, அவர்களது மகள் மிசா பார்தி மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான, 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் படிக்க,


NDA Meeting: ’அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்’ - என்.டி.ஏ கூட்டத்தில் மோடி பேச்சு..


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் அனைத்தும் முழு வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. ஆளும் பாஜக அண்மையில், தங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தியது. இதனிடையே, பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய நிலையில், விரைவில் மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் படிக்க,