கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரு. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த நகரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய சம்பவம் பெங்களூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கல்லூரி மாணவிக்கு மிரட்டல்:


பெங்களூரைச் சேர்ந்தவர் ஆண்டி ஜார்ஜ். இவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் சசி. ஆண்டி ஜார்ஜ் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு கல்லூரி மாணவி ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் பேசியதையும், அந்த பெண்ணின் அந்தரங்க நடவடிக்கைகளையும் தன்னுடைய செல்போனில் பதிவு கொண்ட அந்த இளைஞர், அந்த பெண்ணை அதைக்காட்டி மிரட்டியுள்ளார்.


இதனால், அந்த கல்லூரி மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த நிகழ்விற்கு பிறகு அந்த பெண் அவரிடம் சமூக வலைதளம் மூலமாக பேசுவதை தவிர்த்துள்ளார். ஆனாலும், அந்த நபர் அந்த பெண்ணை மிரட்டி அவரது அந்தரங்க புகைப்படத்தை வாங்கியுள்ளார். பின்னர், அவரது அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவேன் என்று மிரட்டி அந்த பெண்ணை தனியாக வரவழைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


மிரட்டல்:


அந்த சம்பவங்களை எல்லாம் தனது செல்போனில் படம்பிடித்துக் கொண்ட ஆண்டிஜார்ஜ், அந்த வீடியோவை காட்டி அந்த கல்லூரி மாணவியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆண்டி ஜார்ஜ் தன்னுடைய நண்பர்களான சந்தோஷ் மற்றும் சசி ஆகிய இருவரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.


அந்த கல்லூரி மாணவியையும் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்த ஆண்டி ஜார்ஜ், தனது நண்பர்களுக்கு அந்த மாணவியை இரையாக்கியுள்ளார். அவர்கள் இணைந்து அந்த மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.


கைது:


இந்த சம்பவங்களால் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளான அந்த கல்லூரி மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதையடுத்து, போலீசார் நடன ஆசிரியரான ஆண்டி ஜார்ஜை கைது செய்தனர். அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும், கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சந்தோஷ் மற்றும் சசி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி கல்லூரி மாணவியை மிரட்டி நடன ஆசிரியர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் தங்களை யாரேனும் சமூக வலைதளங்களில் மிரட்டினாலோ, அல்லது அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவேன் என்று அச்சுறுத்தினாலோ உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். பெண்களின் துணிச்சலில்தான் மானம் அடங்கியுள்ளது. நிர்வாணத்தில் அல்ல.


மேலும் படிக்க: Crime : கொடூர பாலியல் வன்கொடுமை.. மகளிடம் அத்துமீறிய தந்தை.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்..


மேலும் படிக்க: தலைக்கு வந்தது தொப்பியோடு போச்சு! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய போலீஸ்! கூடுவாஞ்சேரி என்கவுண்டரில் நடந்தது என்ன?