Love Marriage: காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை குஜராத் அரசு ஆய்வு செய்யும் என அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். 


காதல் திருமணம்:


இன்றைய இளைஞர்கள் பெரும் அளவில் காதல் திருமணமே செய்து கொள்கின்றனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த காதல் திருமணம் வெற்றி பெறுகிறது என்றால் அது கேள்விக்குறி தான். காதலிக்கும்போது நம்முடைய முடிவே இறுதி என்று தோன்றும். ஆனால் கல்யாணம் என்று வரும்போது நம் சமூக சூழ்நிலையில், இரு குடும்பங்கள் ஒத்துக்போக வேண்டியிருக்கிறது. காதலித்து அடுத்த கட்டமாக திருமணத்திற்கு போக நினைக்கும் ஒவ்வொரு காதலர்களும் சாதி, மதம், குடும்ப அந்தஸ்து, குடும்ப மரியாதை, குடும்ப சூழ்நிலை என்று நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.  இதுபோன்ற காரணங்களால் காதல் திருமணங்கள் கைகூடுவதில்லை.


இதனால் பல்வேறு சிக்கல்களும் வருகின்றன. அதாவது, காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் கொலை செய்யும் அளவுக்கு இன்றைய இளைஞர்கள் மாறிவிட்டனர்.  மேலும், இந்த காதல் திருமணங்களால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வு சொல்கிறது. காதல் திருமணம் செய்த பெண்கள், அவர்களது பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக,  பெற்றேர்களின் எதிர்பபை மீறி, திருமணம் செய்து கொண்டாலும் அவர்களை சாதி வெறி பிடித்தவர்கள் கொலை செய்யும் சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், தான் குஜராத் அரசு காதல் திருமணம் பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 
 


காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கட்டாயமா?


குஜராத் மாநிலம், மெஹ்சானா பகுதியில் சர்தார் படேல் சார்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பூபேந்திர படேல், ”காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் இளைஞர்கள் பலரும் ஓடிப்போகும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த சம்பவம் பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், இதனை தடுக்க காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்குவது குறித்தும் சாத்தியம் உள்ளதா என்பதை மாநில சுகாதார  அமைச்சர் ருஷிகேஷ் படேல் தன்னிடம் கூறியதாக கூறினார். அரசியலமைப்பு சட்டம் இதை ஆதரித்தால், இது தொடர்பாக ஒரு ஆய்வு மேற்கொண்டு, சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் பூபேந்திர படேல் கூறியுள்ளார். 


காங்கிரஸ் ஆதரவா?


குஜராம் முதலமைச்சரின் இந்த முடிவுக்கு அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் கெடவாலா ஆதரவு தெரிவித்துள்ளார். குஜராத் அரசு, இத்தகைய சட்டத்தை கொண்டுவந்தால் ஆதரவு அளிப்போம் என்றார்.  இந்த முடிவு இளைஞர்கள் மத்தியிலும் காதலர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க 


Maharashtra Accident: கிரேன் சரிந்த விபத்தில் 2 தமிழர்கள் பலி.. மகாராஷ்டிரா விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு