• "நிலவில் இந்தியன் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை" : பிரதமர் மோடி நம்பிக்கை


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் செல்லும் இந்தியன் நிலவில் தரையிறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் ககன்யான் திட்டம் விரைவில் இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும். மேலும், சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் சந்திரயான்-3 சமீபத்தில் நாட்டின் மூவர்ணக் கொடியை நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தியது. 21 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயங்களை இந்தியா எழுதிக் கொண்டிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க



  • மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினால் பயங்கரவாதச் செயலா? நியூஸ்கிளிக் விவகாரத்தில் சரமாரி வாதம்


நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவையும் நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் அமித் சக்ரவர்த்தியையும் கைது செய்யப்படுள்ள நிலையில் , இதன் வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, பிரபீர் புர்கயஸ்தா தரப்பில் செய்தியை வெளியிடுவதன் மூலமாகவோ, பத்திரிகையாளராகத் தொழில் செய்வதன் மூலமாகவோ, நான் எப்படி பயங்கரவாதச் செயலைச் செய்ய முடியும்? மத்திய அரசின் கொரோனா கொள்கைக்கு எதிராக நான் ஏதேனும் கட்டுரையில் கேள்வி எழுப்பினால், அது பயங்கரவாதச் செயலா? என்ற வாதம் முன்வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படிக்க



  • விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. திருவள்ளூரில் திமுகவின் அடையாளமான கி. வேணு காலமானார்..


திமுகவின் முக்கிய நிர்வாகியான திருவள்ளூர் முன்னாள் மாவட்ட செயலாளர் கி. வேணு உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.வேணுவின் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ”தமிழ்நாட்டின் வட எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தைக் கட்டிக் காத்த தீரர் அருமைச் சகோதரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டுத் துடிதுடித்துப் போனேன். எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்குச் சொந்தக்காரர்” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க




  • 'பயணிகளே! ரயிலில் இனி 10 மணிக்கு மேல் சத்தமாக பேசக்கூடாது' ரயில்வே அதிரடி உத்தரவு




இந்திய ரயில்வேயில் இரவு நேரப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு 10 மணிக்கு மேல் பயணிக்கும் பயணிகள் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமாக பேச அனுமதி இல்லை, ஸ்பீக்கர்களில் இசையை இயக்குவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • மழையால் ககன்யான் திட்டத்தின் முதல் பரிசோதனை நிறுத்திவைப்பு: தேதி பின்னர் அறிவிக்கப்படும் - இஸ்ரோ


மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முதல் பரிசோதனை கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. மோசமான வானிலை காரணமாக பரிசோதனை இன்று நடைபெறவில்லை எனவும், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். முன்னதாக மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமானது. அதேநிலை தொடர்ந்ததால், பரிசோதனை முயற்சி 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க