சிக்கிமில் நிலச்சரிவு; சிக்கித்தவித்த 500 பயணிகள்.. பத்திரமாக மீட்ட ராணுவம்..!
சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த 500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர். லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திரிசக்தி கார்ப்ஸ், இந்திய ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் படிக்க
- கர்நாடக முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா.. துணை முதல்வர், 8 அமைச்சர்களும் பதவியேற்பு..!
கர்நாடகா அரசின் புதிய முதலமைச்சராக சித்தராமையா 2வது முறையாக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும், 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மேலும் படிக்க
- மாநில அரசின் அதிகாரத்தை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு
டெல்லி அரசில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில், மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. நிர்வாக அதிகாரங்களை துணை நிலை ஆளுநருக்கு வழங்கி மத்திய அரசு நேற்று அவசர சட்டம் கொண்டு வந்த நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் படிக்க
- 24 மணி நேரத்தில்...சுட்டு வீழ்த்தப்பட்ட 4 ட்ரோன்கள்... எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் செய்த சதி வேலை..!
பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் நான்கு வெவ்வேறு இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த நான்கு ட்ரோன்களை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இடைமறித்து, சுட்டு வீழ்த்தியுள்ளனர்.இதை தொடர்ந்து, இரு நாட்டு எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் படிக்க
ஆசிரியர்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை - எந்தெந்த ஆடைகளுக்கு அனுமதி..?
அசாமில் பள்ளிக்கு வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான புதிய ஆடை கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி ஆசிரியர், ஆசிரியைகள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இதனை பொதுமக்கள் அதிகளவில் ஏற்று கொள்ளவில்லை என விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க
எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடி நாட்டிய தமிழன்..! யார் இந்த குட்டி?
தமிழ்நாட்டின் கடலோர கிராமத்தில் பிறந்து, எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடியை நாட்டியவர் ராஜசேகர் (எ) குட்டி. இவர் ஏப்ரல் 13ம் தேதி எவரெஸ்ட் மலையின் Base Campல் பயணத்தை தொடங்கி, 8850 மீட்டர் உயரத்தை மே 19ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அடைந்து தனது கனவை நிஜமாக்கியுள்ளார். மேலும் படிக்க