சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த 500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர்.
500 பயணிகள் பரிதவிப்பு:
சிக்கிம் மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்த மழையால் நிலச்சரிவுகள் மற்றும் சாலைத் தடைகள் ஏற்பட்டது. இதில் சிக்கித் தவித்த 54 குழந்தைகள் உட்பட 500 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் மீட்டதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லாச்சென், லாச்சுங் மற்றும் சுங்தாங்கில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இந்நிலையில், லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்குக்கு பயணம் செய்த சுமார் 500 சுற்றுலாப் பயணிகள், பாதையில் நிலச்சரிவுகள் மற்றும் சாலைத் தடைகள் காரணமாக சுங்தாங்கில் சிக்கித் தவித்தனர்.
மீட்ட ராணுவம்:
“எஸ்டிஎம் சுங்தாங்கின் வேண்டுகோளின் பேரில், திரிசக்தி கார்ப்ஸ், இந்திய ராணுவத்தினர் நடவடிக்கையில் நடவடிக்கை மேற்கொண்டு சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்டவர்களில் 216 ஆண்கள், 113 பெண்கள் மற்றும் 54 குழந்தைகள் அடங்குவர். அவர்கள் மூன்று வெவ்வேறு இராணுவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சூடான உணவு மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன.
ராணுவத்தினர் துரித நடவடிக்கைகளால் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இதற்காக அவர்கள் தங்கள் முகாம்களை விரைவாக காலி செய்து சுற்றுலா பயணிகளுக்கு கொடுத்துள்ளனர், மேலும் அவர்கள் சாலைகள் உள்ள மண் சரிவு ஆகியவற்றை உடனடியாக அகற்றி வாகனம் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். அதுவரை பயணிகளை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவ குழுக்கள்:
சுற்றுலா பயணிகளின் உடல் நிலையை பரிசோதிக்க 3 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அனைத்து சுற்றுலா பயணிகளின் உடல் நிலையும் சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
குருடோங்மர் ஏரிக்கு சென்ற பெண் சுற்றுலா பயணி ஒருவர், தனக்கு தலைச்சுற்றுவதாக தெரிவித்தார். அப்பெண்ணுக்கு மலைக்கு சென்று வந்தால் ஏற்படக்கூடிய அசெளகரியமான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். பின் அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
மீண்டும் 1000 ரூபாய் நோட்டு அறிமுகமா?...அடித்து சொல்லும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்..!