மேலும் அறிய
Advertisement
Today Headlines : அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்..! ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை.. முக்கிய செய்திகள்..
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- மக்களையும், மனசாட்சியையும் தாண்டி எதற்கும் அஞ்சமாட்டோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- நெடுஞ்சாலைத்துறை முறைகேடு விசாரணை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி மனு வரும் 11-ந் தேதி விசாரணை
- அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓ.பி.எஸ். வழக்கில் 11-ந் தேதி காலை 9 மணிக்கு உத்தரவு
- ஓ.பன்னீர்செல்வம் பல உண்மைகளை மறைத்துள்ளார் – எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் வாதம்
- அ.தி.மு.க.வின் நலன் கருதியே வழக்குத் தொடரப்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்
- முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – 963 சவரன், 15.5 லட்சம் ரொக்கம் பறிமுதல்
- பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர்
- ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
- தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்தியா :
- அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் – 13 பக்தர்கள் மரணம் ; 50 பேர் காயம்
- திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அமர்நாத் புனிதப்பயணம் தற்காலிகமாக நிறுத்தம்
- சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூபாய் 15 குறைக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு
- துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இன்று இந்தியா முழுவதும் தேசிய துக்க தினம் கடைபிடிப்பு
உலகம் :
- ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டுக்கொலை
- ஷின்சே அபே மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல்
- ஷின்சே அபே இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டோக்கியோ பயணம்
- பிரிட்டன் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் போட்டி
- இலங்கையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் தீவிரமடையும் போராட்டங்கள்
- ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிட்டார் எலான்மஸ்க்
விளையாட்டு :
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதியிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் பிரணாய்
- இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
- கடந்த போட்டியில் ஆடாத விராட்கோலி மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion