மேலும் அறிய
Advertisement
Today News : 73வது குடியரசு தினம்..! நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு..! சண்டைக்கு தயாராகும் ரஷ்யா..! முக்கியச்செய்திகள் இங்கே..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- 73வது குடியரசு தின விழா – சென்னையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஆளுநர்
- சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு
- குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு – மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான போலீசார் பாதுகாப்பு
- நீட் தேர்வால் மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி
- மருத்துவ படிப்பில் சேர்வதற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுப்பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் வாய்ப்பு
- தமிழ் எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம், நடிகை சவுகார் ஜானகி உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது
- இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
இந்தியா:
- நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தின விழா கொண்டாட்டம் – டெல்லியில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்
- குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
- குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் டெல்லியில் தீவிர பாதுகாப்பு
- மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
- குலாம் நபி ஆசாத், சுந்தர்பிச்சை ஆகியோருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு
- கச்சத்தீவு திருவிழா : கொரோனா பரவலை காரணம் காட்டி நடப்பாண்டிலும் இந்தியர்களுக்கு தடை
உலகம் :
- உக்ரைன் எல்லையில் 1 லட்சம் படைவீரர்களை குவித்த ரஷ்யா
- ரஷ்யாவை எதிர்கொள்ள ஆயத்தமாகும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாட்டு படைகள்
- உக்ரைன் – ரஷ்யா மோதல் விவகாரத்தில் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பான சூழல்
- உலகம் முழுவதும் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்தால் நடப்பாண்டிலே கொரோனா முடிவுக்கு வரும் - உலக சுகாதார மையம்
விளையாட்டு :
- ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பரம்விசிஷ்ட சேவா பதக்கம்
- இந்தியாவில் ஸபாட் பிக்சிங் விவகாரம் - ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் அதிர்ச்சி அறிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கல்வி
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion