மேலும் அறிய
Advertisement
Today Headlines: பொறியியல் கட்டணம் உயர்வு..! ஜப்பான் சென்றார் பிரதமர்..! இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்..! இன்னும் பல முக்கியச்செய்திகள்
Today Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப்பிரவேசம் கோலாகலமாக நடந்து முடிந்தது
- பல்லக்கு தூக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
- திருவாரூர் மாட்டம் உக்கடம் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜீ.சி.யின் எண்ணெய் குழாய் உடைப்பு
- சென்னையை அடுத்த அம்பத்தூரில் 20 ஆயிரம் லிட்டர் கலப்பட எரிபொருள் பறிமுதல்
- கோடை விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா தளங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
- விழுப்புரத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரியாணி, பரிசுப்பொருட்களை அள்ளிச்சென்ற மக்கள்
- ஜூன் 1-ந் தேதி முதல் தமிழ் வெளிப்புற படப்பிடிப்பு சங்கத்தினர் வேலைநிறுத்தம் – படப்பிடிப்புகள் முடங்கும் அபாயம்
- திருவாரூரில் கோவில் திருவிழாவில் பலூன் விற்கச்சென்ற ராஜஸ்தான் சிறுமி உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
- இலங்கை போரில் உயிரிழந்தவர்களுக்கு அனுமதியின்றி நினேவேந்தல் நடத்தியதாக 500 பேர் கைது
- தமிழ்நாட்டில் குரங்கு காய்ச்சல் பரவவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- நெல்லை கல்குவாரியில் சிக்கிய 6வது நபரின் உடல் மீட்பு – 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவு
இந்தியா :
- குவாட் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி
- குவாட் மாநாட்டில் அமெரிக்க அதிபர் மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரையும் இந்திய பிரதமர் மோடி சந்திக்கிறார்
- பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தியது அகில இந்திய தொழில்நுட்ப கழகம்
- பொறியில் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்களுக்கான சம்பளமும் உயர்வு
- பேராசிரியர் பணிகளுக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 30-ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
- பெட்ரோல் மற்றும் டீசல் வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ரூபாய் 1 லட்சம் கோடி வரி வருவாய் குறையும்
- பெட்ரோல் விலை இனி நாள்தோறும் மீண்டும், மீண்டும் உயரும் - ராகுல்காந்தி
உலகம் :
- தமிழகம் சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கை சென்றது
- இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிய தமிழக முதல்வருக்கு புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி
- உலக அளவில் சிறந்த திரைப்படங்களை உருவாக்கும் மையமாக இந்தியா திகழ்கிறது – பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் விழாவில் மத்திய அமைச்சர் முருகன் பெருமிதம்
விளையாட்டு :
- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமனம்
- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு மீண்டும் வாய்ப்பு
- ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஹைதரபாத் அணியை வீழ்த்திய பஞ்சாப்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion