மேலும் அறிய
Advertisement
Today Headlines : தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி..! உ.பி.யில் 4ம் கட்ட தேர்தல்..! ரஷ்ய அதிபர் புதின் புதிய அறிவிப்பு..! முக்கியச்செய்திகள் பல
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி
- தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க. மாபெரும் வெற்றி
- அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் கைப்பற்றியது பெருமிதம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சென்னை மாநகராட்சியின் புதிய மேயருக்கு வடசென்னையைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு என்று தகவல்
- தமிழ்நாடு முழுவதும் 133 நகராட்சிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி
- அ.தி.மு.க. தலைவர்களின் சொந்த ஊர்களான எடப்பாடி மற்றும் பெரியகுளத்தில் தி.மு.க. அமோக வெற்றி
- தி.மு.க.வின் வெற்றி செயற்கையானது – எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாட்டில் காங்கிரஸ் 592 வார்டுகளில் வெற்றி : பா.ஜ.க. 308 வார்டுகளில் அமோக வெற்றி
இந்தியா :
- உத்தரபிரதேசத்தில் இன்று நடக்கிறது 4ம் கட்ட சட்டசபை தேர்தல் – 51 தொகுதிகளில் 624 வேட்பாளர்கள் போட்டி
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் போராட்டத்தால் கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் மார்ச் 4-ந் தேதி வரை ஒத்திவைப்பு
- இந்திய பிரதமர் மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய வேண்டும் – இம்ரான்கானின் விருப்பம்
உலகம் :
- கிழக்கு உக்ரைனில் உள்ள இரு பகுதிகளை தன்னாட்சி பெற்ற பகுதியாக ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
- உக்ரைன் விவகாரம் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு விவாதம்
- உக்ரைன் குண்டுவீச்சில் எல்லை கட்டமைப்புகள் கடும் சேதம் : ரஷ்ய பாதுகாப்பு
- பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை : 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வு
விளையாட்டு :
- உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய பிரக்யானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
- பல்கேரியாவில் நடைபெற்று வரும் ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிது, அனாமிகா காலிறுதிக்கு தகுதி
- விராட்கோலி ஒரு சூப்பர்ஸ்டார் – நினைவுகளை பகிர்ந்து பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion