மேலும் அறிய
Advertisement
Today Headlines : சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்.... 8 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை... இந்தியா வெற்றி..! இன்றைய பரபரப்பான செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
- கனமழையால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் சென்னையில் நேற்று இரவு மீண்டும் கனமழை
- தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை – விருதுநகர், திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி
- திருநெல்வேலியில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது – நெல்லை தற்காலிக பேருந்து நிலையத்தில் குளம்போல தண்ணீர் தேங்கியது
- வட தமிழக கடற்கரைப் பகுதியை ஒட்டி நகர்கிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
- காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை
- சென்னை மக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், குடிநீர் மற்றும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் – மாநகராட்சி வேண்டுகோள்
- கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- தமிழ்நாட்டில் இன்று 50 ஆயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் – 9வது முறையாக நடைபெறும் மாபெரும் முகாம்
- சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம் – புதிய தலைமை நீதிபதி பதவியேற்கும் வரை பதவி வகிப்பார் என அறிவிப்பு
- பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- முதன்முறையாக பொங்கல் பரிசுத்தொகுப்பில் மக்களுக்கு முழுக்கரும்பு வழங்க உத்தரவு
- குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணமும் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
- ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு – புகார் அளித்தபோதே முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும் மனு
- நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 29-ந் தேதி தொடங்குகிறது – டிசம்பர் 23-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு
- சட்டமன்றங்கள் அனுப்பம் கோப்புகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும் – சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழக சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி : இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion