மேலும் அறிய
Advertisement
News Wrap : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நிறைவு! புதிய கேப்டன் ரோகித்.. இன்றைய முக்கியச் செய்திகள்!
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு
- காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
- பிற்பகல் 3 மணி வரை தமிழ்நாட்டில் 47.18 சதவீத வாக்குகள் பதிவு
- முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர்
- பிரபல நடிகர் விஜய் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் நேரில் சென்று வாக்களித்தனர்
- சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவு : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
இந்தியா :
- பஞ்சாப் மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் – பாதுகாப்பு பணிகள், வாக்கு மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்
- தமிழ்தாத்தா வ.வே.உ. சாமிநாத அய்யரை பாராட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு
- பல்கலைகழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கான தகுதித்தேர்வான நெட் தேர்வு முடிவுகள் வெளியானது
- வேளாண் பணிகளுக்கான 100 கிசான் ட்ரோன்களை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தினார்.
உலகம் :
- அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்கலாம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிர்ச்சி
- உக்ரைன் எல்லையில் போர் விமானங்களை குவித்து வரும் ரஷ்யா – செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியீடு
- ஈரான் தீவிரமாக இருந்தால் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம் – அமெரிக்கா
- கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை அகற்றும் பணியில் போலீசார் தீவிரம்
- ஒமிக்ரான் பிஏ 2 உருமாறிய வைரஸ் டெல்டா வைரசை விட ஆபத்தானது : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
விளையாட்டு :
- இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் : துணை கேப்டனாக பும்ரா நியமனம் - பி.சி.சி.ஐ. அறிவிப்பு
- இந்தியா- இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
- இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட்கோலிக்கு ஓய்வு
- இலங்கைக்கு எதிரான தொடரில் ரவீந்திர ஜடேஜா, பும்ரா மீண்டும் அணியில் சேர்ப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion