மேலும் அறிய

Amit Shah: ”இனிமே எந்த வழக்கானாலும் 2 வருடங்கள்தான்” புதிய குற்றவியல் சட்டம் குறித்து பேசிய அமித்ஷா

புதிய குற்றவியல் வழக்குகள் நடைமுறைக்கு வந்தால், எந்தவொரு வழக்கும் இரண்டு வருடங்களுக்கு மேல் நீடிக்காது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதிய குற்றவியல் வழக்குகள் நடைமுறைக்கு வந்தால், எந்தவொரு வழக்கும் இரண்டு வருடங்களுக்கு மேல் நீடிக்காது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கவுன்சில் கூட்டம்:

மகாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டையு-டாமன் மற்றும் தாத்ரா-நகர் ஹவேலி ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம், நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நடந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகி பிரபுல் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், அமைச்சர்கள் மற்றும் குறிப்பிட்ட மாநில தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது:

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா “இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதீய நீதி மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு மசோதா, பாரதீய சாட்சியங்கள் மசோதா ஆகியவற்றை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தோம். அந்த மசோதாக்கள் நிறைவேறிய பிறகு, எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. அதன்மூலம் 70 சதவீத எதிர்மறையான பிரச்னைகள் நீக்கப்படும். அந்த சட்டங்களை அமல்படுத்த தேவையான போதிய உட்கட்டமைப்பு மற்றும் திறன்களை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும். சமீபத்திய சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு பிறகு இஸ்ரோ அமைப்பை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக இந்திய விண்வெளி துறைக்கு புதிய திசையை காட்டியது மட்டுமின்றி 2030-ம் ஆண்டுக்குள் விண்வெளி துறையில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உயர்த்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்” என பேசினார்.

பிரச்சனைகள் தீர்வு:

முன்னதாக, கூட்டத்தில் மத்திய-மாநில அரசுகள் இடையிலான 17 பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அவற்றில் 9 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

3 மசோதாக்கள்:

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், இந்தியா என்ற வார்த்தையை அரசியலைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கி,  பாரதிய என்ற வார்த்தையை சேர்க்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து அந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அந்த மசோதாக்களை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேநேரம், புதிய சட்டங்கள் மூலம் பாலியல் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் எனவும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Embed widget