மேலும் அறிய

Chandrayaan 3: நிலவுக்கு அருகில் செல்லும் சந்திரயான் 3.. இஸ்ரோ வெளியிட்ட வீடியோ..! அடுத்து என்ன நடக்கும்?

சந்திரயான் 3 பூமியின் சுற்றுபாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று பாதையில் நுழைந்துள்ளது. அடுத்தகட்டமாக வரும் 9 ஆம் தேதி முதல் சுற்றுபாதை தூரத்தை குறைக்கும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்ததாக, 40 நாட்கள் பயணம் செய்து  ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணில் செலுத்தப்பட்ட பின் இரண்டாம் கட்டமாக, விண்கலம் புவியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றதும், அதற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டு புவியின் நீளவட்டப்பாதையில் சுற்ற வைக்கப்பட்டது. 15 நாட்கள் ஒவ்வொரு 170 கிலோ மீட்டருக்கு உந்துதல் வழங்கப்படும். இதனை ஆர்பிட் ரைசிங் என அழைக்கப்படும். அதனை தொடர்ந்து, டிரான்ஸ் லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவு பாதையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நுழைந்தது.

நிலவின் பாதையில் சந்திரயான் 3:

ஆகஸ்ட் 1 ஆம் தேதி சந்திரயான் 3 பூமியின் நீள்வட்டார சுற்றுப்பாதையில் இருந்து அதிகபட்ச உந்துதல் கொடுக்கப்பட்டு நிலவு பாதையில் நுழைந்தது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் சந்திரயான் 3 விண்கலம் நிலவு பாதையில் இருந்து நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.  அதாவது lunar orbit injection  என்ற நிகழ்வு மூலம் விண்கலம் நிலவின் வட்டார சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.

நிலவின் சுற்றுப்பாதையில் இருக்கும் சந்திரயான் 3 விண்கலம் அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும் குறைந்தபட்சம் 100 கிமீ தொலைவாகவும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணி வெற்றிகர்மாக நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை மெல்ல மெல்ல குறைத்து நிலவின் அருகே செல்லும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்கும். நிலவில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவு அடைந்த உடன், சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும். இந்த பணி ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3 விண்கலம்:

100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியையும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திரயான் 3 நிலவின் அதன் ஆராய்ச்சி தொடங்கி தரவுகளை வழங்கும். 

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget