மேலும் அறிய

Delhi Ordinance: மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய உச்ச நீதிமன்றம்..அவசர சட்டம் கொண்டு வந்து கெஜ்ரிவாலுக்கு செக் வைத்த மத்திய அரசு..

தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

தலைநகரில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் துணை நிலை அளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்படுகிறது. இந்த அவசரச் சட்டம் மூலம் தேசிய தலைநகர் சேவை ஆணையம் (National Capital Service Authority) உருவாக்கப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பான விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கு இந்த ஆணையமே பரிந்துரை வழங்கும். டெல்லி முதலமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர், இந்த ஆணையத்தில் இடம்பெறுவர்.  

அதிகாரத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய அனைத்து விஷயங்களும், கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  துணைநிலை ஆளுநர்,  அவரிடம் செய்த பரிந்துரையில் மாறுபட்டு இருந்தால், பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய ஆணையத்திடம் திருப்பி அனுப்பவும், கருத்து வேறுபாடு ஏற்பட்டால், துணைநிலை ஆளுநரின் முடிவே இறுதியானது என்றும் அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசின் அதிகாரங்களை நிலைநாட்டிய நிலையில், இந்த அவசர சட்டத்தின்படி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி சட்டசபை கீழ் வரும் விவகாரங்களில் முடுவெடுக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RR LIVE Score: கட்டுக்கோப்பாக பந்து வீசும் சென்னை; நிதானமாக ரன்கள் சேர்க்கும் ராஜஸ்தான்!
CSK vs RR LIVE Score: கட்டுக்கோப்பாக பந்து வீசும் சென்னை; நிதானமாக ரன்கள் சேர்க்கும் ராஜஸ்தான்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar asset | Mamata Banerjee Dance | முரசு கொட்டியவுடன் மேடையில் VIBE-ஆன மம்தா வைரலாகும் வீடியோRevanth Reddy Playing Football | ”அரசியலில் மட்டுமல்ல கால்பந்திலும் பிஸ்தா” அசத்தும் ரேவந்த் ரெட்டிEdappadi Palanisamy | அடேங்கப்பா..70 கிலோ கேக்கா?பிறந்தநாள் கொண்டாட்டத்தில் EPS  தொண்டர்கள் ஆரவாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RR LIVE Score: கட்டுக்கோப்பாக பந்து வீசும் சென்னை; நிதானமாக ரன்கள் சேர்க்கும் ராஜஸ்தான்!
CSK vs RR LIVE Score: கட்டுக்கோப்பாக பந்து வீசும் சென்னை; நிதானமாக ரன்கள் சேர்க்கும் ராஜஸ்தான்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
TN Weather Update: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Virat Kohli: முக்கிய சாதனையை இன்று எட்டி பறிக்கப்போகும் விராட் கோலி.. முதல் வீரர் இவர்தானாம்..!
முக்கிய சாதனையை இன்று எட்டி பறிக்கப்போகும் விராட் கோலி.. முதல் வீரர் இவர்தானாம்..!
Breaking News LIVE: ராகுல் காந்தியின் வயதைவிட குறைவான சீட்டுக்களைத்தான் காங்கிரஸ் ஜெயிக்கும் - மோடி
ராகுல் காந்தியின் வயதைவிட குறைவான சீட்டுக்களைத்தான் காங்கிரஸ் ஜெயிக்கும் - மோடி
Anu Mohan: 2024-ஆம் ஆண்டில் உலகளவில் காத்திருக்கும் பேரழிவு..குண்டை தூக்கிப்போடும் அனுமோகன்
2024-ஆம் ஆண்டில் உலகளவில் காத்திருக்கும் பேரழிவு..குண்டை தூக்கிப்போடும் அனுமோகன்
Embed widget