மேலும் அறிய

Kerala: கோயில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு தடை - கடுமையாக பின்பற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவு

கேரளாவில் உள்ள கோயில்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பயிற்சி எடுப்பதை தடுக்கும் பழைய உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு தடை:

கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், கேரளாவில் கோயில்களை ஆயுதக் கிடங்காக மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சிப்பதாகவும், இது தொடர்பாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து கோயில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பயிற்சி எடுப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கு மாநில பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாநில பாஜக தலைவர் கும்மனோம் ராஜசேகரன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி பெற்ற பின்னரே ஆயுத பயிற்சிகள் நடைபெற்றதாக தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையின் நோக்கம் கோயில் வளாகங்களை இடதுசாரி கொள்கைகள் கொண்ட இடமாக மாற்றுவது தான் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். 

திருவிதாங்கூர் தேவசம் போர்டு:

இதனைத் தொடர்ந்து மீண்டும் 2021 ஆம் ஆண்டும் இதேபோன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பயிற்சி எடுப்பதை தடை விதிக்கப்பட்ட முந்தைய உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்த அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்படும் ஊர்வலங்கள் உள்ளிட்ட எதையும் அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், பின்பற்றாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு அறிவுறுத்தியும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவதை தொடர்ந்து இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget