Sonali phogat: நடனம் ஆடும்போது போதைபொருள்.?! வெளியான புது வீடியோ! சோனாலி மரணத்தில் அடுத்தடுத்து திருப்பம்!!
கோவாவில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகட் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவாவில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகட் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sonali Phogat murder case | A drug peddler, identified as Rama Mandrekar, arrested by Anjuna Police in the matter, taking the total number of arrests in the case to five.
— ANI (@ANI) August 28, 2022
சோனாலியின் கூட்டாளிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாகக் கூறப்படும் மற்றொரு வியாபாரிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குற்றச்சாட்டில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
போகாட் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு பார்ட்டியில் இருந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் போதைப்பொருள் வியாபாரி சனிக்கிழமை கைது செய்யப்பட்டு கொலை மற்றும் போதைப்பொருள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட ஹரியானா பாஜக தலைவரின் கூட்டாளிகளான சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் 10 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சந்தேகம் நீடித்து வந்த சோனாலியின் மரணம் குறித்து தகவல் வெளியிட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜிவ்பா தல்வி, "சோனாலி போகட் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வடக்கு கோவாவில் உள்ள ஒரு உணவகத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் கொடுக்கப்பட்டது.
அஞ்சுனாவில் உள்ள கர்லீஸ் உணவகத்தில் அவருக்கு வழங்கப்பட்ட போதைப்பொருளில் எஞ்சியவை உணவகத்தின் கழிவறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது தனி உதவியாளர் சுதிர் சக்வான், மற்றொரு உதவியாளர் சுக்விந்தர் சிங், கர்லீஸ் உணவகத்தின் உரிமையாளர் எட்வின் நூன்ஸ் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் தத்தபிரசாத் கவுன்கர் ஆகியோரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
#WATCH | Chandigarh: Family members of the deceased BJP leader Sonali Phogat meets Haryana CM Manohar Lal Khattar pic.twitter.com/crhmBX8Soq
— ANI (@ANI) August 27, 2022
சுக்விந்தர் சிங் மற்றும் சங்வான் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், நூன்ஸ் மற்றும் கோன்கர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மெத்தம்பேட்டமைன் என அடையாளம் காணப்பட்டுள்ளது" என்றார்.
போகட் ஆகஸ்ட் 23 அன்று மருத்துவமனைக்கு இறந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டார்.