மேலும் அறிய

டெல்லி சட்டப்பேரவை டூ செங்கோட்டைக்கு சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்!

Red Fort Secret Tunnel: டெல்லி சட்டப்பேரவையிலிருந்து செங்கோட்டைக்கு செல்ல சுரங்கப் பாதை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

டெல்லி சட்டப்பேரவையிலிருந்து செங்கோட்டைக்கு செல்ல சுரங்கப் பாதை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக நேற்று வெள்ளிக்கிழமை டெல்லி சட்டப்பேரவை அலுவலர்கள் விதான் சபாவில் சுரங்கப் பாதை ஒன்றிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

சட்டப்பேரவை வளாகத்துக்குள் இருக்கும் இந்த அறையின் மேற்கதவு கண்ணாடியால் அமைக்கப்பட்டு அதன் மேலே மறைப்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதை குறித்து, டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், "டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் சுரங்கப்பாதை போன்றதொரு அமைப்பு செங்கோட்டை வரையிலும் செல்கிறது. இதன் வரலாறு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், இது பிரிட்டிஷ்காரர்களால் கட்டப்பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லும்போது பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாகாமல் பத்திரமாக செல்ல ஏதுவாக இவ்வாறு ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை டூ செங்கோட்டைக்கு சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்!

இந்த சுரங்கப்பாதையை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் மக்கள் பார்வைக்கு திறக்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாகத் தெரிகிறது. அதே வேளையில் இதன் வரலாற்றுப் பின்னணி குறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் பேசியுள்ளதாகவும் அதனால் இப்போதைக்கு அந்தப் பாதையை மேலும் தோண்டாமல் இருக்கப்போவதாகவும் தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவைக்கும் செங்கோட்டைக்கும் இடையேயான தூரம் 5.5 கி.மீ. இந்த தூரத்தை வாகனத்தில் கடந்தால் 10 நிமிடங்களில் கடந்துவிடலாம். ஆனால், அந்தக் காலத்தில் இப்படியொரு ரகசிய சுரங்கப் பாதையை கட்டிவைத்துள்ளனர்.

2016ல் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப் பாதை..

2016 ஆம் ஆண்டு, நாடாளுமன்ற சேம்பரிலேயே ஒரு ரகசிய பாதாள பாதை இருப்பதாக அரசல்புரசலாகப் பேசப்பட்டது. இது குறித்து தகவலறிந்த டெல்லி சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல். அவர் மேற்பார்வையிலேயே அந்த சுரங்கப் பாதையை மீண்டும் கண்டுபிடித்தார். அந்தப் பாதையும் சிறைபிடிக்கப்பட்டவர்களைக் கொண்டு செல்லவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை வளாகம் 1911ல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களின் தலைநகரை கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றினர். அப்போது தான் இந்த வளாகம் கட்டப்பட்டது.

இது போன்ற சுரங்கப் பாதை, ரகசிய அறைகள் கண்டுபிடிப்பு இந்தியாவின் வளமான வரலாற்றின் ஒரு சாட்சியாகும். டெல்லி செங்கட்டோட்டையை முகலாய மன்னர்கள் கட்டிச் சென்றனர். பின்னர் அந்தக் கட்டிடங்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களின் வசதிக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தினர் என்பதற்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் ஒரு சான்று. செங்கோட்டை, நாடாளுமன்ற கட்டிடம் என டெல்லியில் உள்ள பல வரலாற்று சிறப்புமிக்கக் கட்டிடங்களில் இன்னும் எத்தனை எத்தனை ரசியங்கள் புதைந்து கிடக்கின்றனவோ? என்ற ஆர்வல் தொல்லியல் அறிஞர்களுக்கு உண்டு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget