மேலும் அறிய

துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - கர்நாடக அரசின் புதிய திட்டம்!

துப்புரவு தொழிலாளர்கள் கர்நாடகாவிலும் காரில் பயணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை . என்ற முதல்வர் . வரும் நாட்களில் அனைத்து தொகுதிகளிலும் தலா 100 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்க இருப்பதாக கூறினார்

கர்நாடக மாநிலத்தில் துப்புரவு பணியார்களுக்கு இலவச மின்சார இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

கர்நாடக மாநில  சமூகநலத்துறையின் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டுக் கழகம் சார்பில்  'விதான சவுதா' படிக்கட்டுகள் அருகே துப்புறவு தொழிலாளர்களுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை 'விதான சவுதா', 'விகாச சவுதா' மற்றும் 'எம்.எஸ். கட்டடங்கள்' ஆகியவற்றில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர்களை வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார். நேற்று ( வெள்ளிக்கிழமை) முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம்   மாநிலத்தில் உள்ள பத்து மாநகராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - கர்நாடக அரசின் புதிய திட்டம்!
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் “துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் அளித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதன் அவசியத்தையும் "அவர்களின் வாழ்வில் வலிமையைப் புகுத்த வேண்டும்" என்பதையும் பொம்மை அடிக்கோடிட்டுக் காட்டினார்.இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 600 துப்புரவு பணியாளர்களில் 400 பேருக்கு முதல் கட்டமாக வாகனங்கள் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “  கர்நாடக மாநிலத்தில் துப்புரவு பணியாளர்களின் வேலை மிக முக்கியமானது. மின்சார வாகனங்கள் விநியோகம் என்பது அவர்களின் பணியை கௌரவிக்கும் பல திட்டங்களில் ஒன்று. மேலும் அவர்களது வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை வழங்க அரசு பல திட்டங்களை வைத்திருக்கிறது. மேலை நாடுகளில் துப்புரவு தொழிலாளர்கள் காரில் பயணிக்கிறார்கள். கர்நாடகாவில்  ஸ்கூட்டரில் பயணிக்கிறார்கள் . துப்புரவு தொழிலாளர்கள் கர்நாடகாவிலும் காரில் பயணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற முதல்வர், வரும் நாட்களில் அனைத்து தொகுதிகளிலும் தலா 100 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்க இருப்பதாக கூறினார் . இதன் மூலம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் துப்புறவு தொழிலாளர்கள் பயனடைவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - கர்நாடக அரசின் புதிய திட்டம்!
முன்னதாக கர்நாடக மேலவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிஷ் குமார் கேள்விக்கு பதிலளித்த, நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி பசவராஜ் துப்புரவு தொழிலாளர்களின் நலன் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன், தேவைப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டித் தரப்படும். மங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பச்சனாடி, கடுபு கிராமத்தில் 6.32 ஏக்கர் நிலத்தில் 200 வீட்டுமனைகளை உள்ளடக்கிய குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

 

 

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
Embed widget