Sabarimala Temple: பக்தர்களே... வைகாசி மாத பூஜை; சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு..! யாருக்கெல்லாம் அனுமதி?
உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வைகாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்பட்டது.
![Sabarimala Temple: பக்தர்களே... வைகாசி மாத பூஜை; சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு..! யாருக்கெல்லாம் அனுமதி? Sabarimala Temple today open from next 5 days vaigasi pooja today starts and open at evening 5 Sabarimala Temple: பக்தர்களே... வைகாசி மாத பூஜை; சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு..! யாருக்கெல்லாம் அனுமதி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/14/5268754125bc0f1817142ccb9d13b3051684056070082333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Sabarimala Temple: வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திறக்கப்பட்டது.
சபரிமலை
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.
இன்று நடை திறப்பு
இந்நிலையில், வைகாசி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். நாளை முதல் 5 நாட்கள் கோயில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது. தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)