சபரிமலை ஐயப்பன் கோயில்: தங்கத் தகடு மாயம், புதிய தலைவர் நியமனம்! பக்தர்களின் குறைகள் தீர்க்கப்படுமா?
சபரிமலை தேவஸ்தான புதிய தலைவராக மலையாள பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைமை செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவியிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றக் கோயில். இந்த கோயிலின் ஐயப்பன் சன்னதிக்கு முன்பு துவாரபாலகர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு மேல் சுமார் 42 கிலோ எடை உடைய தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவாரபாலகர் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க தகடுகள் மீது தங்க முலாம் பூசுவதற்காக சபரிமலை நன்கொடையாளராக இருந்த உன்னிகிருஷ்ணன் போர்த்தி என்பவர் மூலம் சென்னையில் உள்ள SMAR CREATION நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது திருவராங்கூர் தேவஸ்தானம். பணிகள் முடிந்து மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டபோது 38 கிலோ தங்கம் குறைந்து துவார பாலகர் சிலை தங்க தகடுகள் 4.52 கிலோ மட்டுமே இருந்துள்ளது.
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையின் அறிக்கையை 6 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், தங்கம் மாயமானது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, எஸ்ஐடி அதிகாரிகள் உன்னிகிருஷ்ணன் போர்த்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சபரிமலை கருவறையின் இருபுறமும் உள்ள துவாரபாலகன் சிலைகள் தங்க முலாம் பூசப்படவில்லை.
அவை செப்பு தகடுகள். ஆனால்,சபரிமலை கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகன் சிலைகள் பீடங்கள் தங்கமெல்லாம் பூசப்பட்டவை என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தங்க தகடுகள் பதிக்கப்பட்டவை என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை திருவதாங்கூர் தேவஸ்தம்போடு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உன்னிகிருஷ்ணன், முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் தேவஸ்தான புதிய தலைவராக மலையாள பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைமை செயலாளரும், முன்னாள் துணைவேந்தருமான ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கூறுகையில், எனக்கு விடுக்கப்பட்டுள்ளது ஒரு தெய்வீக அழைப்பு. அரசின் உத்தரவு கிடைக்கப் பெற்றதும் பொறுப்பேற்பேன். வாரியத்தின் செயல்பாட்டை மேலும் தொழில் முறைமயமாக்குவதற்கு பாடுபடுவேன். ஒவ்வொரு நெருக்கடியையும் ஒரு வாய்ப்பாக நான் பார்க்கிறேன். பக்தர்களுக்கு சுமூகமான யாத்திரையை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாங்கள் நேர்மையற்ற மக்களை விரட்டியடித்து பக்தர்களின் குறைகளை தீர்ப்போம். சபரிமலை சீசன் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். சர்ச்சைகள் எங்கள் கவனம் அல்ல. அரசாங்கத்தின் நம்பிக்கையை நான் நிலைநிறுத்துவேன் என்றார்.






















