மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி – புதிய அறிவிப்புகள்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள்கள் மண்டல பூஜை காலம்   நாளை 17-இல் தொடங்கி டிசம்பர் 27 வரை நடைபெறவுள்ளது. இதற்காக தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், தற்போதைய மேல்சாந்தி இ.டி. பிரசாத் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்தார்.


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி – புதிய அறிவிப்புகள்!

மேல்சாந்தி நடையை திறந்ததும தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூடப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு மண்டல பூஜை மகர விளக்கு வழிபாட்டிற்கு ஓராண்டுக்கு புதிய மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி சுப்பிரமணியன் போற்றி மளிகைபுரம் மேல் சாந்தி சங்கரன் போற்றி இருவரும் இருமுடி கட்டி 18 படிக்கில் நின்றனர்.

இருவரையும் தற்போதைய சபரிமலை மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றார். இருவருக்கும் தந்தூரி கண்டரரு பிரம்மதத்தன் ஐயப்பன் மந்திரங்களை சொல்லிக் கொடுத்து மேல் சாந்தியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, நாளை (நவ. 17) அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். முக்கிய நிகழ்வான மண்டல பூஜை, டிச.27-ஆம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜைக்குப் பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்குத் திருவிழாவுக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்குத் திருவிழா ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது.

மண்டல பூஜை நாள்களில் இணையவழி மற்றும் உடனடி முன்பதிவு முறைகளின்கீழ் தினமும் 80,000 பக்தா்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். இந்த நிலையில், பம்பா, நிலக்கல் போன்ற சபரிமலை சுற்றுப்பகுதிகளில் 2,000 போலீசாரும், சன்னதியில் 1,500 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன்படி, யாத்திரையின் போது பக்தர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு இந்தக் காப்பீடு பொருந்தும். பக்தர் சன்னிதானத்திற்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே தொடங்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் மூன்று நாள்களுக்குச் செல்லுபடியாகும்.


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி – புதிய அறிவிப்புகள்!

முதல் நாளில் விபத்து மரணங்களுக்கும், அடுத்த இரண்டு நாட்களில் விபத்து மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை மரணங்களுக்கும் இதன் மூலம் காப்பீடு வழங்கப்படும். இந்தக் காப்பீட்டிற்காக பக்தர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதற்கான வருடாந்திர பிரீமியம் தொகையான ரூ. 1.5 கோடியை தேவசம் போர்டே ஏற்கும்.

சபரிமலைக்கு வரும் பக்தா்கள் அங்கிருந்தபடியே பிரசாதங்களை இந்தியா போஸ்ட் விரைவு அஞ்சல் பாா்சல் சேவை மூலம் தங்களின் வீட்டுக்கு அனுப்பும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தரிசனம் முடித்து திரும்பும் பக்தா்கள், பிரசாதங்களை தங்களுடன் தூக்கிச் செல்ல வேண்டிய சிரமம் குறையும். சபரிமலை கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ
இந்தியாவில் முதல் முறை! கருப்பைக்குள் இருந்த 25 வார சிசுவுக்கு அறுவை சிகிச்சை! AIIMS மருத்துவர்கள் சாதனை!
இந்தியாவில் முதல் முறை! கருப்பைக்குள் இருந்த 25 சிசுவுக்கு அறுவை சிகிச்சை! மருத்துவர்கள் சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
தொழில் நுட்பக்கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - உயிர் பிழைத்த 192 பயணிகள்
தொழில் நுட்பக்கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! - உயிர் பிழைத்த 192 பயணிகள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
Aadhav Arjuna: 14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
Embed widget