Ramadan 2022 Wishes: இந்த ரம்ஜானுக்கு இப்படி பண்ணுங்க! நண்பர்களுக்கு வாழ்த்துகள் அனுப்ப சில சூப்பர் டிப்ஸ்!!
Ramadan 2022 Wishes in Tamil: ரம்ஜான் நோன்பு காலத்தில் சூரிய உதயம் தொடங்கி அது மறையும் வரை பகல் நேரங்களில் உணவோ அல்லது தண்ணீரோ அருந்தாமல் கடும் நோன்பைக் கடைபிடிப்பார்கள்.
இந்தியாவில் பிறை தெரிவதைப்பொறுத்து ரம்ஜான் பண்டிகை வருகின்ற மே 2 ஆம் தேதி அல்லது மே 3 ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.
இஸ்லாமிய சமயத்தின் மிக முக்கியமான பண்டிகைளில் ஒன்று தான் ரமலான் எனப்படும் ரம்ஜான். இத்திருநாளை சுமார் ஒரு மாத அளவிற்கு இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள். குறிப்பாக ரம்ஜான் பண்டிகை தொடங்குவதற்கு ஒரு மாத கால முன்பாக நோன்பை மேற்கொள்கின்றனர். இந்த நோன்பு காலத்தில் சூரிய உதயம் தொடங்கி அது மறையும் வரை பகல் நேரங்களில் உணவோ அல்லது தண்ணீரோ அருந்தாமல் கடும் நோன்பைக்கடைப்பிடிப்பார்கள். நோன்பு காலம் முடிவடைந்தபிறகு, பிறை எப்பொழுது தெரிகிறதோ? அன்றைய நாளை இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். அரசு விடுமுறையின் தகவல் படி, மே 3 ஆம் தேதி என்றுள்ளது. ஆனால் இந்தாண்டு இந்தியாவில் பிறை தெரிவதைப்பொறுத்து மே 2 அல்லது மே 3 ஆம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும்.
ரம்ஜானில் உங்கள் அன்புக்குரியவர்கள் மகிழும் வகையிலான வாழ்த்துக்களைப் பகிருங்கள். இதோ உங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில வாழ்த்துக்கள் இங்கே….
"ஈத் திருநாளில்( ரம்ஜானில்) உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பாக அமையட்டும். உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள்.
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் ரம்ஜான் தின வாழ்த்துக்கள்
வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்! வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்!
பிறைகண்டு பெருநாள் கொண்டாடும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், இனி வளர்பிறையாய் இருக்கட்டும். அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்
இனிய ரமலான் தின வாழ்த்துக்கள்.
ரம்ஜான் உங்களது வாழ்வில் அன்பு, சிரிப்பு, சகோதரத்துவம் நிறைந்ததாக இருக்க வழிவகுக்கும்.
ஆங்கில வாழ்த்துக்கள் சில….
‘“May the auspicious occasion of Ramadan Kareem bring to all of us many more joys and celebrations.’
Happy Ramzan to all my friends
Ramzan Mubarak., ‘ May allah gives you all success and happiness in your life’.
May allah gives countless happiness in your life..
Happy Eid Mubarak
இதுப்போன்று பல வாழ்த்துகளை உங்களது நண்பர்களுக்குப் பகிர்ந்து இந்த ரம்ஜானை சிறப்பாக கொண்டாடுங்கள். குறிப்பாக இத்திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளையும் பரிசுகளையும் வழங்கி இஸ்லாமிய மக்கள் மகிழ்வார்கள். முக்கியமாக பிரியாணி விருந்து தான் ரம்ஜானில் முக்கியமான ஒன்றாக இருக்கும். இதுப்போன்று வழக்கம்போல இந்தாண்டு ரம்ஜான் திருநாள் சிறப்பாக கொண்டாட அனைவரும் பிரார்த்திப்போம்.