மேலும் அறிய

ISRO: 9 செயற்கைக்கோள்களுடன் 26-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி. சி-54' ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO)பிஎஸ்எல்வி சி-54 (pslv c54 ) ராக்கெட், 9 செயற்கைக்கோள்களுடன் வரும் 26-ஆம் தேதி விண்ணில் பாய உள்ளது.

அமெரிக்கா, சீன மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவும், அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில்  பெரும் வளர்சி கண்டு வருகிறது. அண்மையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் துறை ராக்கெட்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 'பிரரம்ப்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் அந்த ராக்கெட்டை வடிவமைத்தது.

பிஎஸ்எல்வி ராக்கெட்:

தனியார் பங்களிப்பின் முதல் முயற்சியே வெற்றி பெற்ற நிலையில், பிஎஸ்எல்வி சி-54 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடங்கியுள்ளது. பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் இந்த 56வது பயணம்,  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் 26-ம் தேதி காலை 11.56 மணிக்கு தொடங்க உள்ளது. மொத்தம் நான்கு நிலைகளை கொண்டுள்ள இந்த ராக்கெட்டில், முதல் மற்றும் மூன்றாவது உந்து நிலைகளில் திட எரிபொருளும், இரண்டு மற்றும் நான்காவது நிலைகளில் திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது.

செயற்கைகோள்களின் விவரங்கள்:

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடைகொண்ட, 'ஓசன்சாட்03' என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் உடன் 8 நானோ செயற்கைகக்கோள்களையும்  சுமந்து செல்ல உள்ளது. அவற்றில்  அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள் மட்டும் நான்கு அடங்கும். அதோடு, தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் ஆனந்த் ஆகிய செயற்கைக்கோள்களை, இஸ்ரோ மற்றும் பூடானை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதோடு, சுவிட்சார்லாந்தின் ஒரு செயற்கைக்கோளும் புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பப்பட உள்ளது.

கவுண்ட் - டவுன் எப்போது தொடங்கும்?:

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்-டவுன், வரும் 25-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
பட்ஜெட் விலையில் மாஸ் மைலேஜ்.. அறிமுகமாகியது அப்டேட்டட் 2026 TVS Radeon பைக்
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
Embed widget