"வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றும் காங்.வென்றது எத்தனை?" - காங்கிரசை சாடிய பிரதமர் மோடி!
4 மாநில சட்டமேலவை தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி சாடல்

உத்தர பிரதேசம், கர்நாடகா, பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்ட மேலவைகளுக்கான தேர்தல்களில் மொத்தமுள்ள 28 இடங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
காங்கிரசை விமர்சித்த பிரதமர் மோடி
குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் நான்கு இடங்களுக்கான தேர்தல்களிலும்
அக்கட்சி படுதோல்வி அடைந்ததோடு அவ்விடங்கள் அனைத்தையும் பாஜக கூட்டணி கைப்பற்றியது. இத்தேர்தல் கடந்த 23-ஆம் தேதியன்று வாக்குச்சீட்டு முறை மூலம் நடைபெற்றது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நான்கு மாநிலங்களில் மொத்தமாக 28 இடங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இத்தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என நினைக்கிறீர்கள்? என கிண்டல் செய்துள்ளார்.
EVM வாக்குப்பதிவும் - வாக்குச்சீட்டு முறையும்!
மின்னணு வாக்குச்சீட்டு முறை மூலம் பாஜக வாக்குகளை திருடி வருவதாகவும் இதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடந்தையாக செயல்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற சட்டமேலவைத் தேர்தலை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















