மேலும் அறிய

Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது காங்கிரஸ், திமுக கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

சுயநல அரசியலுக்காக காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் மகளிர்  இட ஒதுக்கீடு மசோதா வரவிடாமல் தடுத்து விட்டனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, “நான் சொல்லப்போகும் விஷயம் தாய்மார்கள், தங்கைக்களுக்கு தான். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாததற்காக பெண்களிடம் மன்னிப்பு கோருகிறேன். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் மகளிர் வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துள்ளனர். ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் இருப்பதை என்னால் உணர முடிகிறது” என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் நலனே நமது முன்னுரிமை. ஆனால், நாட்டின் நலனை விட அரசியல் ஆதாயம் சிலருக்கு முன்னுரிமையாகும்போது, ​​அதன் சுமையை நாட்டின் பெண்கள் சுமக்க நேரிடுகிறது.  இந்த முறையும் அது தான் நடந்தது.  காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியலால் நாட்டின்  பெண்கள் சுமையைச் சுமக்க நேரிட்டது. 

காங்கிரஸூம், அதன் கூட்டணி கட்சிகளும் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். மாநில கட்சிகள் வளர்வதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை. பெண்கள் மசோதா நிறைவேற்றப்படாமல் போன நிலையில் எதிர்க்கட்சிகள் கொண்டாடி வருகின்றனர். 

21 ஆம் நூற்றாண்டின் பெண்கள் நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள் என்பதை  எதிர்க்கட்சிகள் மறந்து விடுகிறார்கள். அவர்களால் உள்நோக்கங்களை உணரவும், உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் முடியும். எனவே, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்ததன் மூலம் எதிர்க்கட்சிகள் செய்த பாவம் நிச்சயம் தண்டிக்கப்படும். இந்தக் கட்சிகள் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உணர்வுகளையும் அவமதித்துள்ளன, மேலும் மக்கள் வழங்கும் தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா யாரிடமிருந்தும் எதையும் பறிப்பது பற்றியது அல்ல, அது அனைவருக்கும் எதையாவது கொடுப்பது பற்றியது” எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு அதிக இடங்கள் வழங்கவே மறுசீரமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு ஒவ்வொரு மாநிலத்துக்கும் பலனளிக்கும். காங்கிரஸ் கட்சியை  ஒட்டுண்ணியைப் போல தனது மாநில கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து வாழ்கிறது. பெண்களுக்கான மசோதா நேர்மையான முயற்சி மற்றும் இது காலத்தின் தேவைக்கேற்றது என அவர் தெரிவித்துள்ளார். 

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்ததன் மூலம் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகள் சிசுக்கொலை செய்துள்ளன எனவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
TASMAC bars : தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
தவெக அரசின் அடுத்த அதிரடி.! டாஸ்மாக் பார்களை டெண்டர் எடுக்க புது ரூல்ஸ்- என்னென்ன தெரியுமா.?
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
Embed widget