மேலும் அறிய

ஒரே நேரத்தில் 8 கார்களை வாங்கி அடுக்கிய பவன் கல்யாண்... காரணம் என்ன?

ஜனசேனாவின் தலைவர் பவன் கல்யாண் மகேந்திரா பிராண்டிலிருந்து எட்டு கார்களை வாங்கி அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.

ஜனசேனாவின் தலைவர் பவன் கல்யாண் மகேந்திரா பிராண்டிலிருந்து எட்டு கார்களை வாங்கி அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். பவன் கல்யாண் தனது அரசியல் பிரசாரத்திற்காக பயணம் மேற்கொள்ள இந்த வாகனங்களை வாங்கியதாக  கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, வருகின்ற 2024 ம் ஆண்டு ஆந்திராவில் சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆந்திராவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக, பிரச்சாரத்தின்போது தனக்கும் தனது ஊழியர்களுக்கும் பாதுகாப்பான போக்குவரத்துக்காக மகேந்திரா பிராண்டிலிருந்து எட்டு கார்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 பவன் மூன்று மாதங்களுக்கும் மேலாக பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், ரோட்ஷோவைத் தொடங்குவதற்கு முன்பாக, சாய் தரம் தேஜுடன் இணைந்து வினோதயா சித்தம் தெலுங்கு ரீமேக்கிற்கான படப்பிடிப்பை பவன் கல்யாண் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பவன் கல்யாண் வாங்கிய அந்த கார்கள் அனைத்தும் நேற்று அவரது ஜன சேனா கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 8 வண்டிகளும் பவன் கல்யாண் மேற்கொள்ள உள்ள பேருந்து பிரச்சாரப் பயணத்தின் அவருடைய 'கான்வாய்' ஆக செல்ல இருப்பதாகவும், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இந்த வண்டிகளை பவன் கல்யாண் அவரது சொந்தப் பணத்தின் மூலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Nayanthara Vignesh Shivan: மாமியார் வீட்டில் விருந்து மட்டுமில்லை... கேரள சேட்டனாக மாறிய விக்னேஷ் சிவன்!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Embed widget