மேலும் அறிய

14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு – புதிய கட்டண பட்டியல் வெளியீடு!

அண்மைகாலமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் பெறும் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு திடீரென பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தேவையான முக்கியமான ஒரு ஆவணம் தான் பாஸ்போர்ட். இது இருந்தால் தான் வேலை, கல்வி, சுற்றுலா, தொழில் என அனைத்து தேவைகளுக்கும் நம்மால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.


14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு – புதிய கட்டண பட்டியல் வெளியீடு!

அண்மைகாலமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் பெறும் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு திடீரென பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை உயர்த்தியுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், 1980-ஆம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி புதிய பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. புதிய பாஸ்போர்ட் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி விதிக்கப்பட்டுள்ள விபரங்கள் :

1. 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்:  வழக்கமான விண்ணப்பம் : ரூ.2,500 ( பழைய கட்டணம் ரூ.1,500)தட்கல் விண்ணப்பம் : ரூ.5,000 (பழைய கட்டணம் ரூ.3,500)

2. 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்: வழக்கமான விண்ணப்பம் : ரூ.3,500 (பழைய கட்டணம் ரூ. 2,000)தட்கல் விண்ணப்பம் : ரூ.6,000 (பழைய கட்டணம் ரூ.4,000)

3. தொலைந்த அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டிற்கு பதில் புதிய பாஸ்போர்ட்.  36 பக்கங்கள்: சாதாரண விண்ணப்பம் - ரூ.5,000, தட்கல் விண்ணப்பம் - ரூ. 7,50060

பக்கங்கள்: சாதாரண விண்ணப்பம் - ரூ. 6,000 தட்கல் விண்ணப்பம் - ரூ. 8,500

4.18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கட்டணம்: புதிய விண்ணப்பம்/புதுப்பித்தல்: சாதாரண விண்ணப்பம் - ரூ.1,750, தட்கல் விண்ணப்பம் - ரூ. 4,250

தொலைந்த/சேதமடைந்த பாஸ்போர்ட்: சாதாரண விண்ணப்பம் - ரூ.4,250, தட்கல் விண்ணப்பம் - ரூ.6,750


14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு – புதிய கட்டண பட்டியல் வெளியீடு!

இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் அமலுக்கு வருகிறது. ஜூலை 1 மற்றும் அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் அனைத்திற்கும் இந்த புதிய கட்டணங்களே வசூலிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, அதிகாரப்பூர்வமான பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டண விவரங்களைச் சரிபார்த்து அதற்கேற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்போர்ட் விண்ணப்ப மற்றும் புதுப்பித்தல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண மாற்றம் பாஸ்போர்ட் சேவைகளின் தரம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் ஜூலை 1க்கு முன்பே விண்ணப்பம் செய்தால் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும். வெளிநாடு செல்லும் திட்டத்தில் இருப்பவர்கள் இன்னும் 3 நாட்களில் விண்ணப்பம் செய்தால் கட்டண செலவை மிச்சப்படுத்தலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
இன்றைய டாப் 10: தமிழகம் மற்றும் இந்தியாவில் இன்று நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget