மேலும் அறிய

பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?

11KV உயரழுத்த மின்கம்பியின் மீது தொடர்ச்சியாக எச்சில் பட்டநிலையில் அதன் வழியாக மின்சாரம் முதியவர் பலி

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோடாவை சேர்ந்த பிரபுலால் குப்தா எனும் 65 வயது முதியவர் காயத்ரி நகரில் உள்ள  வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குட்கா பயன்படுத்தும் பழக்கம் கொண்ட பிரபுலால் குப்தா, மதிய வேளையில் மூன்றாவது மாடியின் பால்கனியில் இருந்து குட்காவை 
மென்று துப்பியுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தது எப்படி?

 பிரபுலால் குப்தா துப்பிய எச்சிலானது பால்கனியை ஒட்டிச்சென்ற 11KV உயரழுத்த மின்கம்பியின் மீது தொடர்ச்சியாக பட்டநிலையில் அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குடியிருப்புகளுக்கு அருகே உயரழுத்த மின் கம்பிகள் செல்வது குறித்து பலமுறை புகாரளித்தும் மின் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிகள் மக்கள் இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர். 

மின்கடத்தியாக செயல்பட்ட உமிழ்நீர்

11KV போன்ற உயரழுத்த மின் கம்பியின் அருகே ஏதேனும் ஈரப்பதமோ அல்லது கடத்தியோ இருக்குமானால் அதன்வழியாக மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. இந்நிலையில் மனித உமிழ்நீர் அதாவது எச்சிலில் ஈரப்பதத்துடன் உப்புக்களும் இருப்பதால் அதிக மின்கடத்தும் திறன் செயல்பட்டு அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க குடியிருப்புக்களை ஒட்டி மின்சாரக்கம்பிகள் அமைக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தி ஊடகத்துறையில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். நியூஸ் 7 தமிழ், நியூஸ் ஜே உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் sub editor, breaking incharge, rundown incharge ஆக பணியாற்றியுள்ளார். வரலாறு, அரசியல் உள்ளிட்ட செய்திப் பிரிவுகளில் ஆர்வம் கொண்டவர். தற்போது ABP NADU-நிறுவனத்தில் copy editor ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு! மண்டல காலத்திற்கான முழு ஏற்பாடுகள் தயார்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு! மண்டல காலத்திற்கான முழு ஏற்பாடுகள் தயார்!
ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்! சபரிமலை ஐயப்பன் பிரசாதம் இனி உங்கள் வீடு தேடி வரும்!
ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்! சபரிமலை ஐயப்பன் பிரசாதம் இனி உங்கள் வீடு தேடி வரும்!
ஆயிரத்தில் கூட இல்லை... மீண்டும் உயிர்ப்புடன் தென்பட்ட அரிய வனவிலங்கு: வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ஆயிரத்தில் கூட இல்லை... மீண்டும் உயிர்ப்புடன் தென்பட்ட அரிய வனவிலங்கு: வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி
கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! வாடகை கார் தொழில் தொடங்க புதிய விதிகள்!
கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! வாடகை கார் தொழில் தொடங்க புதிய விதிகள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "உரிமையைப் பெற்றுத்தருவோம்.." மேகமலை, வருசநாடு மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் CTR நிர்மல்குமார்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
Kanda Sashti: கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் கவனத்திற்கு! சூரசம்ஹாரத்திற்குப் பிறகு செய்ய வேண்டியவை என்ன?
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
IPL 2027: சேவாக் மகனுக்கு செம டிமாண்ட்! 2 கே கிட்ஸ்களை குறிவைக்கும் அணிகள்! எதிர்காலம்தான் முக்கியம்
IPL 2027: சேவாக் மகனுக்கு செம டிமாண்ட்! 2 கே கிட்ஸ்களை குறிவைக்கும் அணிகள்! எதிர்காலம்தான் முக்கியம்
திருவிழா தொடங்கியது! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் பரவசம்!
திருவிழா தொடங்கியது! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் பரவசம்!
Embed widget