மேலும் அறிய

Odisha Train Accident: மறையாத மனிதநேயம்.. ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு ரத்தம் கொடுக்க குவிந்த மக்கள்..!

ஒடிசா ரயில் விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பயணிகளுக்கு இரத்தம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். 

ஒடிசா ரயில் விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் பயணிகளுக்கு இரத்தம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் குவிந்துள்ளனர். 

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக மாநில, தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒடிசாவில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதேபோல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்கள், பலத்த காயம் மற்றும் இலேசான காயம் அடைந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகமும், மத்திய அரசும் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. ரயில் விபத்து காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் இதுவரை இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில்  சிகிச்சைப் பெறும் பயணிகளுக்கு இரத்தம் கொடுக்க பாலசோரில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

பெயிலில் வந்த போக்சோ கைதி..! மனைவி, 4 வயது & 18 மாத மகன்கள், 17 வயது சிறுமி, மூதாட்டி - 6 பேர் கொடூர கொலை
பெயிலில் வந்த போக்சோ கைதி..! மனைவி, 4 வயது & 18 மாத மகன்கள், 17 வயது சிறுமி, மூதாட்டி - 6 பேர் கொடூர கொலை
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Embed widget