News Today Live : குயின்ஸ்லேன்ட் ரிசார்டை அப்புறப்படுத்த அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் இருவர் கைது

ABP NADU Last Updated: 07 Oct 2021 06:01 PM
குயின்ஸ்லேன்ட் ரிசார்டை அப்புறப்படுத்த அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி

பூந்தமல்லியில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு சொந்தமான கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குயின்ஸ்லேண்ட் விடுதியை அகற்ற அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குத்தகை காலம் முடிந்த பின் நிலத்தை ஆக்கிரமித்து இருந்தததற்காக ரூபாய் 9.5 கோடி வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அடுத்த 4 வாரத்தில் அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அப்துல் ரசாக் குர்னாவிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2021ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தான்சானியா நாட்டைச் சேர்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவர் தனது 21 வயது முதல் பல்வேறு புத்தகங்களை எழுதி வருகிறார். வளைகுடா நாடுகளில் உள்ள அகதிகள் பற்றி இவர் எழுதிய புத்தகத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் பா.ஜ.க.வின் எச்.ராஜாவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேடசந்தூரில் 2018ம் ஆண்டு அறநிலையத்துறை அதிகாரிகளை எச்.ராஜா மீது அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பை நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வருமான வரம்பை நிர்ணயிக்க அறிவியல்பூர்வ ஆய்வு செய்யப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற வேண்டும் என்கிறீர்கள். பெரு நகரங்களுக்கும், சிறு நகரங்களுக்கும் எப்படி ஒரே வருமான வரம்பை நிர்ணயித்தீர்கள்? வட்டாட்சியர் எந்த அடிப்படையில் வருமான சான்றிதழ் வழங்குகிறார்? எனவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் இருவர் கைது

உத்தரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் ஆஷிஷ் மிஸ்ராவில் ஆதரவாளர்கள் இருவர் கைது. எத்தனை பேர் கைது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது

Background

லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் அமைச்சரின்  மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் இருவர் கைது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.