Watch Video: ஜெய்பூரில் சிஎன்ஜி வெடித்து சிதறியது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.


வெடித்து சிதறிய பெட்ரோல் பங்க்:


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் பங்கிற்கு வெளியே, சிஎன்ஜி டேங்கர் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று அதிகாலை அந்த வழியாக வந்த டிட்ரக் ஒன்று எதிர்பாராத விதமாக, சிஎன்ஜி டேங்கர் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியுள்ளது. இதனால் ஏற்பட்ட தீயால், சிஎன்ஜி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதனால் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில்,  அதிகாரிகளின் கூற்றுப்படி மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது, ​​அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் தீப்பிடித்து எரிந்த தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.









மோதியது ரசாயன டிரக்கா?


தீ கொளுந்துவிட்டு எரிவது தொடர்பான வீடியோ காட்சிகள், பிரமாண்ட தீப்பிழம்பையும் அதற்கு மேலே எழுந்துள்ள கரும்புகை மேகத்தையும் காட்டுகின்றன. பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தவர்களாலும் இந்த தீப்பிழம்புகளை பார்க்க முடிந்துள்ளது. விபத்தில் பெட்ரோல் பங்க் அருகே இருந்த பல கார்களும் எரிந்து நாசமாகின. முதற்கட்ட தகவல்களின்படி, மற்ற வாகனங்கள் மீது மோதிய லாரியில் ரசாயனம் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. "பல டிரக்குகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லாரிகளின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. தீக்காயங்களுடன் சிலர் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிருஷ்டவசமாக அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.



முதலமைச்சர் நேரில் ஆறுதல்:


ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மாவும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனைக்கு விரைந்தார். இந்த வார தொடக்கத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் இரண்டு லாரிகளின் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்கள் மோதியதைத் தொடர்ந்து தீப்பிடித்து இறந்தனர். தீ அணைக்கும் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.