மேலும் அறிய

ரயில்வேயின் புதிய பாதுகாப்பு விதி: இரவு சார்ஜிங் தடை ஏன்? ரயில் பயணிகளே தெரிந்துகொள்ளுங்கள்!

ரயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் செய்ய ரயில்வே வாரியம் தடை விதித்திருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, செல்போன்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத சாதனமாக மாறியுள்ளன. நீண்ட தூர ரயில் பயணங்களின்போது பயணிகள் தங்களது செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.


ரயில்வேயின் புதிய பாதுகாப்பு விதி: இரவு சார்ஜிங் தடை ஏன்? ரயில் பயணிகளே தெரிந்துகொள்ளுங்கள்!

இதன் மூலம் பயணிகள் தங்களது பயண நேரத்திலேயே மின்னணு சாதனங்களை சார்ஜிங் செய்துகொள்ள முடியும். இருப்பினும், இந்தச் சார்ஜிங் வசதிகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் மின்சாரக் கோளாறுகள் மற்றும் பேட்டரி வெடிப்பு போன்ற சம்பவங்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்ற கவலை அதிகரித்திருக்கிறது.

தென்கிழக்கு ரயில்வேயில் இயங்கிக் கொண்டிருக்கும் மும்பை - ஹவுரா மெயில் (12809) கடந்த அக்டோபர் 24ஆம் தேதி ஒடிசா மாநிலம் சக்ரதர்பூர் கோட்டம் பண்டமுண்டாவில் பயணித்துக் கொண்டிருந்த போது, B-3 ஏசி பெட்டியில் பயணி ஒருவர், அதிகாலை சுமார் 3.38 மணியளவில், தனது பவர் பேங்க்கை சார்ஜிங் பாயிண்ட்டில் இணைத்துவிட்டு உறங்கியுள்ளார். அப்போது பவர் பேங்க் வெடித்ததில் தீப்பற்றியதுடன், பெட்டி முழுவதும் புகை பரவியுள்ளது. இதனால் தீ எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது. இதையடுத்து ரயில் பண்டமுண்டா அருகே சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மற்றும் ரயில்வே வணிகப் பிரிவு ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 3.53 மணியளவில் ரயில் மீண்டும் புறப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ரயில் பெட்டிகளுக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது தீ பரவும் அபாயம் இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகாக, இரவு நேரத்தில் ரயில்களில் சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பைத் துண்டிப்பது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து, ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


ரயில்வேயின் புதிய பாதுகாப்பு விதி: இரவு சார்ஜிங் தடை ஏன்? ரயில் பயணிகளே தெரிந்துகொள்ளுங்கள்!

அதன்படி, அனைத்து ரயில்களிலும் உள்ள செல்போன் சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க வேண்டும். இந்த நடைமுறையை எவ்வித விதிவிலக்கும் இன்றி கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்ட்கள் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்வது ரயில்வே ஊழியர்களின் பொறுப்பு என்றும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் பயிற்சியையும் வழங்க வேண்டும் என்றும் ரயில்வே வாரியம் வலியுறுத்தியுள்ளது.

ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவானது அனைத்து ரயில்களிலும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்ய, ரயில்வே அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ரயில்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இரவு நேரத்தில் சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு நடைமுறைகளில் அலட்சியம் ஏற்படாமல் இருக்கவும், பயணிகளின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்! மும்பை - பெங்களூர், வாரணாசி - டெல்லிக்கு புதிய சேவை!
வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்! மும்பை - பெங்களூர், வாரணாசி - டெல்லிக்கு புதிய சேவை!
நவம்பர் 1 முதல் சிலிண்டர் விலை உயர்வு? மானியம், முன்பதிவு விதிகளில் அதிரடி மாற்றங்கள்!
நவம்பர் 1 முதல் சிலிண்டர் விலை உயர்வு? மானியம், முன்பதிவு விதிகளில் அதிரடி மாற்றங்கள்!
Traffic e-Challan: ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
ரூல்ஸ் மீறாட்டியும், ட்ராஃபிக் போலீஸ் FINE போட்டு இருக்காங்களா? ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
Cyclone Arnab: 145 கி.மீ. வேகம்.. 26 செ.மீ. மழை.. மரண பயத்தை காட்டிய அர்னாப் புயல்.. பள்ளிகளுக்கு லீவு! என்னென்ன பாதிப்பு?
Cyclone Arnab: 145 கி.மீ. வேகம்.. 26 செ.மீ. மழை.. மரண பயத்தை காட்டிய அர்னாப் புயல்.. பள்ளிகளுக்கு லீவு! என்னென்ன பாதிப்பு?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
DMK: கரூரிலேயே விஜய்யை முடித்திருந்தால்.. வாயை விட்ட டீட்டா சரவணன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
Auto Fare Hike: ஆட்டோ பிரியர்களுக்கு ஷாக்.. 1.8 கி.மீ-க்கு ரூ.50.. வெயிட்டிங் சார்ஜ்.. இரவு கட்டணம் எவ்வளவு?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
OMR ECR Road: OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
OMR-லிருந்து ECR-க்கு புதிய இணைப்பு சாலை..! சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம் - இனி ஈசி பயணம்
Embed widget