மேலும் அறிய

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்: மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக திமுக சார்பில் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடிவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து விலக்கு கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். 

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை அடுத்து நீட் விலக்கு கோரி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் முடிந்திருக்கும் சூழலில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என். ரவி இன்று திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமிளத்துள்ளது.

இந்த சூழலில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும், இதுதொடர்பாக பிப்ரவரி ஐந்தாம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டுமென திமுக மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.  மாநிலங்களவை செயலாளரிடம் திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா இந்த நோட்டீஸை வழங்கினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: ”ஏற்க முடியாது; அன்றே அண்ணா ஆளுநரைப்பற்றி சொன்னார்....” - நினைவு கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

25 ஆண்டுகளுக்குப் பிறகு தோழிகளுடன் சந்திப்பு.. மகிழ்ச்சியில் திளைத்த 130 பெண் போலீசார்!

தலைப்பு செய்திகள்

ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
ஐடிஆர் போர்ட்டல் கோளாறு: வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி!
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Embed widget