பாரா ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் 3 முறை தங்கம் வென்ற வீரர் தற்கொலை - காரணம் தெரியுமா?
பாரா ஆசியப்போட்டியில் பங்கேற்காததால் நீரஜ் யாதவ் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தகவல்

யார் இந்த நீரஜ் யாதவ்?
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 3 முறை தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் யாதவ். 2018-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் யாதவ், 2023-ல் ஹாங்சூவில் நடைபெற்ற போட்டிகளில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் பிரிவுகளில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றார்.
ஜப்பான் பாரா போட்டியில் பங்கேற்காத நீரஜ் யாதவ்
ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசியப்போட்டியில் இந்திய வீரர், வீராங்கணைகள் பங்கேற்று 30 தங்கம் உட்பட 114 பதக்கங்களை வென்று சாதனைப்படைத்தனர். ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததன் காரணமாக நீரஜ் யாதவ் இப்போட்டித்தொடரில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக நீரஜ் யாதவ் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்துக்கொண்ட நீரஜ் யாதவ்
இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நீரஜ் யாதவ் தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் சத்யநாராயணா இத்தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் தற்கொலைக்கான முழுமையான காரணம் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகாத நிலையில் காவல்துறையினரின் விசாரணைக்கு பின்பே முழுவிவரம் வெளிவரும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















