அத்தியாவசிய மருந்துகள் பற்றிய தேசியப் பட்டியல்: தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?
தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து அரசாங்கம் 26 மருத்துகளை நீக்கியுள்ளது அதற்குப் பதிலாக புதிதாக 34 மருந்துகளை சேர்த்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம். இந்தப் பட்டியலை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் பாரதி பன்வார் வெளியிட்டனர்.
தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து அரசாங்கம் 26 மருத்துகளை நீக்கியுள்ளது அதற்குப் பதிலாக புதிதாக 34 மருந்துகளை சேர்த்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம். இந்தப் பட்டியலை மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் பாரதி பன்வார் வெளியிட்டனர்.
இப்போது இந்தப் பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. இவற்றில் நிறைய ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், தடுப்பூசிகள், புற்றுநோய் தடுப்பு மருந்துகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளதால் இவற்றின் விலை குறையும் என்பதே முக்கிய அம்சம்.
இந்தப் பட்டியலில் கூடுதலாக ஐவர்மெக்டின், முபிரோசின், மெரோபெனெம், ஹார்மோன்கள், பிற நாளமில்லா சுரப்பி சிகிச்சைகளுக்கான மருந்துகள், கருத்தடை மருந்துகள், சுவாசக் குழாயில் செயல்படும் மருந்து மாண்டெலுகாஸ்ட், கண் மருத்துவ மருந்து லட்டானோப்ரோஸ்ட், இருதய மருந்துகள் டபிகாட்ரான் மற்றும் டெனெக்டெப்ளேஸ் ஆகியவை கூடுதலாக இடம் பெற்றுள்ளன. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் பெண்டாமுஸ்டைன் ஹைட்ரோகுளோரைடு, எச்சிஐ டிரைஹைட்ரேட், லெனலிடோமைடு மற்றும் லியூப்ரோலைடு அசிடேட் ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் ரானிடிடின், சுக்ரால்ஃபேட், ஒயிட் பெட்ரோலேட்டம், அடெனால், மெதில்டோபா போன்ற மருந்துகள் பட்டியலில் இடம்பெறவில்லை. சந்தையில் இவற்றைவிட நல்ல மருந்துகள் இருப்பதால் இவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ள மருந்துகள் எல்லாமே ஸ்கெட்யூல்ட் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றின் விலையை நேஷனல் ஃபார்மாசிட்டிக்கல் ப்ரைஸிங் அத்தாரிட்டி என்றழைக்கப்படும் தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணயம் ஆணையம் நிர்ணயிக்கிறது.
அத்தியாவசிய மருந்துகள் பட்டியல் என்றால் என்ன?
உலக சுகாதார அமைப்பின் படி , அத்தியாவசிய மருந்துகள் என்பன பொது மக்களின் மிக முக்கியமான சுகாதார பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் மருந்துகள் தான் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
முதன்முதலில் 1977ல் உலக சுகாதார நிறுவனம் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை வெளியிட்டது. அதில் 186 அத்தியாவசிய மருந்துகள் இருந்தன.
அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற என்ன தகுதி வேண்டும்?
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்களைக் காப்பாற்ற உதவும் மருந்துகள் தான் அத்தியாவசிய மருந்துகள் எனக் கூறப்படுகிறது.
நோய் சுமை என்பது மக்கள் தொகையில் பெரும்பாலான மக்களைத் தாக்குவதாகும். அத்தகைய நோய் சுமையைக் குறைப்பதே அத்தியாவசிய மருந்துகள் என்று அறியப்படுகிறது.
அதுமட்டுமல்ல அது நோய்களைக் கட்டுப்படுத்துவதில் திறன் வாய்ந்ததாகவும், மருத்துவத் துறையில் பரவலாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
மேலும் அது விலையைப் பொறுத்தவரையில் கையடக்க விலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
எப்போது இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது?
தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இருந்து ஒரு மருந்து நீக்கப்படுகிறது என்றால் அது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அதன் பாதுகாப்பு பற்றி கவலைக்குரிய விஷயங்கள் வெளியாகி இருக்க வேண்டும்.
அந்த மருந்தை மக்களுக்கு பரவலாக ஏற்படும் நோய்க்கான மருந்தாக பயன்படுத்தும் அவசியம் குறைந்திருக்க வேண்டும். அதாவது அந்த நோய் குறைந்திருக்க வேண்டும்.