மேலும் அறிய

மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?

மெட்டா நிறுவனம் இந்த வாரம் ஒரு புதிய ஏஐ இமேஜ் டூலை அறிமுகம் செய்தது. ஆனால் இந்த டூல் தற்போது பயனர்களின் பிரைவசி பாலிசிக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

இன்றெல்லாம் பலர் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சோஷியல் மீடியா தளங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட இமேஜ்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதற்காக நிறைய ஆப் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இதை தெரிந்து கொண்ட முன்னணி நிறுவனங்களும் மாதத்திற்கு ஒரு AI இமேஜ் டூலை ரிலீஸ் செய்துவிடுகின்றன.

மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?

அப்படித்தான் மெட்டா நிறுவனம் இந்த வாரம் ஒரு புதிய ஏஐ இமேஜ் டூலை அறிமுகம் செய்தது. ஆனால் இந்த டூல் தற்போது பயனர்களின் பிரைவசி பாலிசிக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

மெட்டா மியூஸ் இமேஜ்: மெட்டா நிறுவனத்தின் சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப் என்ற குழுவால் உருவாக்கப்பட்டது தான் மியூஸ் இமேஜ் என்ற ஏஐ டூல். இந்த டூல் ஏற்கனவே மெட்டா ஆப், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் வாட்ஸ் ஆப் சேட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் பேஸ்புக் மற்றும் மெசஞ்சரில் கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.மியூஸ் இமேஜ் டூலில் நீங்கள் நினைக்கும் விஷயத்தை டைப் செய்தால் போதும். தெள்ளத்தெளிவாக படத்தை உருவாக்கி தந்துவிடும். உதாரணமாக ஆங்கிலத்தில் Collage என்று சொல்லப்படுகிற பலப் புகைப்படங்களை ஒன்றாக இணைப்பது, படத்தில் ஒரு பகுதியை மட்டும் மாற்றி தருவது, ஏதாவது டெக்ஸ்டை சேர்த்து கொடுப்பது, QR கோடுகளை உருவாக்குவது என பல வேலைகளை இந்த மியூஸ் டூல் துள்ளியமாக செய்துவிடும்.

மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?

சரி இவ்வளவு துல்லியமாக இமேஜை உருவாக்குகிறது என்றால் அது நல்ல விஷயம் தானே என்று உங்களுக்கு தோன்றலாம். உண்மையிலேயே இங்கு தான் பிரச்சனை இருக்கிறது. யாராவது ஒருவருடைய இன்ஸ்டாகிராம் புரொஃபைலை குறிப்பிட்டு அந்த நபரின் முகம் மற்றும் தோற்றத்தை பயன்படுத்தி ஒரு புதிய படத்தை உருவாக்கச் சொன்னால் AI அப்படியே உருவாக்கி விடுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு எந்தவிதமான அறிவிப்பும் மெட்டா நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்படுவதில்லை. அதோடு எந்த அனுமதியும் கேட்கப்படுவதில்லை.

மேலும் பப்ளிக் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த அம்சம் தானாகவே ஆன் செய்யப்பட்டு விடுகிறது. அதாவது வேறு யார் வேண்டுமானாலும் உங்கள் புகைப்படத்தை வைத்து படங்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்கும் படங்கள் குறித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட மாட்டாது என்று மெட்டாவின் ஹெல்ப் பேஜில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே இப்போது கூட யாராவது உங்கள் புகைப்படங்களை வைத்து படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.

மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?

மேலும் மியூஸ் இமேஜ் மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு வாட்டர் மார்க் சேர்க்கப்படும். இதை வைத்து AI மூலம் உருவாக்கப்பட்ட இமேஜ் என்பதை கண்டுபிடித்து விடலாம். உங்கள் புகைப்படங்களை மெட்டா பயன்படுத்தக்கூடாது என்றால் அதற்கு நீங்கள் கீழ்காணும் விஷயத்தை செய்யலாம்.

முதலில் உங்கள் இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனை திறந்து உங்கள் ப்ரொபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் டிஸ்ப்ளே மேல்புறம் மெனு இருக்கும். அதை ஸ்க்ரோல் செய்து "Sharing and reuse" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் "Allow people to use your content on Instagram and with AI features on Meta" என்ற ஆப்ஷன் கீழ் Reels மற்றும் Posts பட்டனை ஆஃப் செய்துவிட்டால் போதும். இந்த செட்டிங்கை நீங்கள் லாக் செய்வதற்கு முன்பு உங்கள் படங்களை யாரவது பயன்படுத்தியிருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது. அனால் இனிமேல் பயன்படுத்தாமல் தடுக்க முடியும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget