மேலும் அறிய

Mekedatu Dam Project: தமிழ்நாடு அரசின் மேகதாது தீர்மானம் கண்டனத்திற்கு உரியது-கர்நாடக முதலமைச்சர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மேகதாது திட்டம் தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோத முடிவு. இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசின் முடிவு எதுவாக இருந்தாலும்  மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. மற்றொரு மாநில உரிமையில் தலையிடுவதன் மூலம் மக்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

2022 - 2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கை  மார்ச் 4 ம் தேதி கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கையில், பக்கம் 23, பத்தி 75-ன ல், மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதியை பெற்று மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.  இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்தச் சூழலில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாதுவில் கர்நாடக அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அது ஒருமனதாக இன்று நிறைவேற்றப்பட்டது.  அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற மாநிலம் சார்ந்த பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன் கூறினார். அதன்பின்னர் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடகா முதலமைச்சரின் கருத்து அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் விவசாயங்கள் சேர்ந்து போராட்டம் நடத்தினர். அத்துடன் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


மேலும் படிக்க:தரையில் விழுந்து வணங்கிய 125 வயது முதியவர்.. பத்ம விருதுகள் விழாவில் சுவாரஸ்யம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
சபரிமலை சீசன்: தரிசனம் உறுதி, ஆன்லைன் அறைகள், ஏ.ஐ கூட்டக் கட்டுப்பாடு!
சபரிமலை சீசன்: தரிசனம் உறுதி, ஆன்லைன் அறைகள், ஏ.ஐ கூட்டக் கட்டுப்பாடு!
வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர் இருக்கலாம்? மீறினால் 7 ஆண்டுகள் சிறை!
வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர் இருக்கலாம்? மீறினால் 7 ஆண்டுகள் சிறை!
IRCTC புதிய தளம்: AI மூலம் டிக்கெட் உறுதி, முன்பதிவு இனி நொடியில்!
IRCTC புதிய தளம்: AI மூலம் டிக்கெட் உறுதி, முன்பதிவு இனி நொடியில்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget