மேலும் அறிய

பணத்துக்காக போகாதீங்க.. உயிர் போயிடும்.. ரஷ்ய ராணுவத்தில் சேரும் இந்திய மக்களுக்கு அரசு எச்சரிக்கை!

ரஷ்யாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, முகவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் இந்தியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவருகிறது.

ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம் என இந்தியக் குடிமக்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக இந்த விஷயம் நடைபெற்று வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முயற்சிகளின் விளைவாக, ரஷ்ய ஆயுதப் படைகளிடமிருந்து 139 இந்தியர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி,  “தங்களுக்குக் கிடைக்கும் பணப் பலன்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், பின்னர் இந்திய அரசை அணுகி விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நம்பி, தனிநபர்கள் தாங்களாகவே முன்வந்து ரஷ்ய ஆயுதப் படைகளில் சேருவதற்கான வாய்ப்புகளை நாடும் எண்ணற்ற நிகழ்வுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என தெரிவித்துள்ளது. 

மேலும், இது ஒரு ஆபத்தான பாதை.  ரஷ்யாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, முகவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் இந்தியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவருகிறது. தனிநபர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்து, ரஷ்ய கடவுச்சீட்டைப் பெற்று, பின்னர் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்வதற்காக இந்திய அதிகாரிகளை அணுகிய பல சம்பவங்களும் நடந்துள்ளன. 

அத்தகைய தனிநபர்கள் இதுபோன்ற செயல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அதனால் தங்களுக்கு ஏற்படக்கூடிய உயிருக்கு ஆபத்தான அபாயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்தியக் குடிமக்கள், குறிப்பாக வெளியுறவு அமைச்சகத்தில் பதிவு செய்யப்படாத ஆட்சேர்ப்பு முகவர்களிடமிருந்து வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ரஷ்ய ஆயுதப் படைகளில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் விரைவான பணிவிடுவிப்பை உறுதி செய்வதற்காக, இந்திய அரசு ரஷ்யத் தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்ய இராணுவப் பிரிவுகளில் சமையல்காரர்கள், உதவியாளர்கள் போன்ற துணைப் பணியாளர்களாக இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி விடுப்பு செய்யும் முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் அரசுப் பணிகள் தருவதாக வாக்குறுதியளித்து, ரஷ்ய இராணுவ சேவையில் கட்டாயப்படுத்தப்பட்டதாக பல இந்தியர்கள் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
இனி UPI பேமெண்ட்டுக்கும் கட்டணமா? NPCI அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
இனி UPI பேமெண்ட்டுக்கும் கட்டணமா? NPCI அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம்! விவரம் இதோ..
சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம்! விவரம் இதோ..
அசாமில் ரெயில் விபத்து...6 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அலறல்; உயிர் தப்பியதால் நிம்மதி!
அசாமில் ரெயில் விபத்து...6 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அலறல்; உயிர் தப்பியதால் நிம்மதி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
Embed widget