மேலும் அறிய

Actor Devan: பாஜகவில் இருந்து விலகல்.. விஜயுடன் இணையும் தேவன்.. கேரளாவில் கால் பதிக்கும் தவெக!

2024-2025 காலகட்டத்தில், இந்தக் கட்சியை விட்டு விலகுவது பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன். பாஜகவில் தொடர்ந்தால், ஒரு அரசியல்வாதியாக எனது லட்சியம் நிறைவேறாது என்று நினைத்தேன் என தேவன் கூறியுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் தேவன், பாஜகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். அவரை வைத்து கேரளத்தில் தவெகவை வளர்க்கும் முடிவில் அக்கட்சி இருப்பதாக சொல்லப்படுகிறது. 

தமிழ், மலையாளம் சினிமாவில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தேவன். இவர் கேரள பாஜகவில் மிக முக்கிய தலைவராக திகழ்ந்தார். இவர் 2004ம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அதனை 2021ம் ஆண்டு பாஜகவுடன் இணைத்து விட்டார். அவருக்கு 2023ம் ஆண்டு கேரள மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. கேரள மாநில பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் தனது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகவும், கட்சியில் எனக்கு போதிய அங்கீகாரம், இடம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக ஆகஸ்ட் 17ம் தேதி அறிவித்தார். இந்த நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் பாஜகவுக்காக மிகவும் உறுதியாகவும், தீவிரமாகவும், பல இடர்களை எதிர்கொண்டும் பணியாற்றி வந்தேன். ஆனால், அவர்களால் எனது நோக்கத்தையும் திட்டமிடலையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் இவை அனைத்திற்கும் எதிராக இருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை என்று நான் நினைக்கிறேன். பணம் சம்பாதிப்பதில்தான் அவர்களுக்கு ஆர்வம் உள்ளது. அதை நான் எதிர்த்தேன். அவர்கள் என்னைச் சிறையில் அடைத்தார்கள்.

2024-2025 காலகட்டத்தில், இந்தக் கட்சியை விட்டு விலகுவது பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன். பாஜகவில் தொடர்ந்தால், ஒரு அரசியல்வாதியாக எனது லட்சியம் நிறைவேறாது என்று நினைத்தேன். நான் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன். இதைப் பார்த்த ஜோசப் விஜய் தனது  தமிழக வெற்றிக் கழகத்தில் சேர எனக்கு விருப்பமா என்று கேட்டு சிலர் மூலம் என்னை அணுகினார். நாங்கள்  மிகவும் விரிவான மற்றும் சுவாரஸ்யமான உரையாடலை நடத்தினோம்.

இறுதியாக, சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்களுடன் எனக்கு ஒரு ஆன்லைன் சந்திப்பு நடந்தது. கொள்கையளவில் கட்சியில் சேர்வதற்கு நான் ஒப்புக்கொண்டேன். எனவே நான் ஜோசப் விஜயை தனியாகச் சந்தித்து, அவருடன் கலந்துரையாட விரும்புவதாக அவர்களிடம் கூறினேன். அதன் பிறகு தவெக சார்பில் எனக்கு செப்டம்பர் 10 ஆம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நாளில் முதலமைச்சர் விஜயை சந்திப்பதற்கான அந்த வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன். எனவே,கடவுளின் அருளால் நான் பெரும்பாலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இருப்பேன் என நம்புகிறேன்” என நடிகர் தேவன் கூறியுள்ளார். இதன் மூலம் கேரள அரசியலில் விரைவில் தவெக முழுவீச்சில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

EPFO புதிய வசதி அறிமுகம்! வாட்ஸ்அப்பில் PF பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?
EPFO புதிய வசதி அறிமுகம்! வாட்ஸ்அப்பில் PF பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?
UPI வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை! ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி பணப் பரிமாற்றம்!
UPI வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை! ஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி பணப் பரிமாற்றம்!
ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
ஹோட்டலில் தோசை சுட்டு ஓட்டுக்கேட்ட அமெரிக்க வேட்பாளர்! அங்க வரை பரப்பிட்டீங்களா?
தீவிர காற்று மாசுபாட்டால் திண்டாடும் தேசியத்தலைநகர்! - அமலுக்கு வந்த கடும் கட்டுப்பாடுகள் என்ன?
தீவிர காற்று மாசுபாட்டால் திண்டாடும் தேசியத்தலைநகர்! - அமலுக்கு வந்த கடும் கட்டுப்பாடுகள் என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
TASMAC: குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்...100 மீட்டருக்குள் பார்.. தமிழக அரசின் புது ரூல்ஸ்! முழு விவரம் இதோ!
TASMAC: குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்...100 மீட்டருக்குள் பார்.. தமிழக அரசின் புது ரூல்ஸ்! முழு விவரம் இதோ!
AFG Cricket: அசத்தும் ஆஃப்கானிஸ்தான்! பின்னுக்குப் போன இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்! தரவரிசையில் இப்படி ஒரு ஏற்றமா?
AFG Cricket: அசத்தும் ஆஃப்கானிஸ்தான்! பின்னுக்குப் போன இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்! தரவரிசையில் இப்படி ஒரு ஏற்றமா?
TN Luxury Cars: டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
டாப் கியரில் தமிழ்நாட்டிற்கு விரையும் லக்சரி கார்கள் - லிஸ்டில் டெஸ்லா, ரோல்ஸ் ராய்ஸ் - ப்ரீமியம் விலை
Embed widget