மேலும் அறிய

Kolkata Metro: நதிக்கடியில் மெட்ரோ இரயில் சோதனை ஓட்டம் வெற்றி; இந்தியாவில் முதல் முறை!

Kolkata Metro: கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ இரயில் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை உட்பட நாடுமுழுதும் மெட்ரோ இரயில் இயங்கி வருகிறது. சுரங்கப் பாதை, உயர்ந்த பாலங்கள் என மெட்ரோ பாதைகள் உள்ளன. இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக நீருக்கடியில் அதாவது 'Underwater Metro Line'-திட்டம் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

ஹூக்ளி நதிக்கடியில் உருவாக்கப்பட்ட மெட்ரோ பாதையில் மேற்கொள்ளப்பட்ட மெட்ரோ இரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் குறித்த வீடியோ ஒன்றையும் நிர்வாகம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

மெட்ரோ இரயில் திட்டம் 

சாலைப் போக்குவரத்தில் உள்ள சிக்கல்களை சரிசெய்யவும், மக்களின் பயணத்தை எளிதாக்கவும் மெட்ரோ இரயில் சேவை செயல்படுத்தப்பட்டது. சென்னை,டெல்லி, பெங்களூர், புனே உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மெட்ரோ இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. 

நீருக்கடியில் மெட்ரோ இரயில் சேவை 

நாட்டிலேயே முதன்முறையாக கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதிக்கடியில் மெட்ரோ இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாக இது கருதப்படுகிறது. அதிவேகம் இரயில் சேவை திட்டத்தில் முக்கிய மைல்கல் இந்தத் திட்டம். 

ஹவுரா முதல் Esplanade வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஹுக்ளி நதிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள  மெட்ரோ இரயில் பாதை தெளிவாக திட்டமிடலுடன் அமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கொல்கத்தா மெட்ரோவில் பொது மேலாளர் பி. உதய் குமார் ரெட்டி இது குறித்து கூறுகையில்,”நீருக்கட்டியில் மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது வரலாற்று மைல்கல்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,”ஹூக்ளி நதிக்கடியில் ரயில் சென்றது இதுவே முதல்முறை. நாட்டிலேயே பூமிக்கடியில் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரொ இரயில் பாதை. 33 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.வரலாற்று பெருமைகளை உள்ளடக்கிய கொல்கத்தாவிற்கு மேலும் சிறப்பினை வழங்கக்கூடிய தருணம் இது. ஏழு மாதங்களுக்கு பிறகு இந்தப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.” என்றும் உதய் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு இறுதிக்குள் ஹவுரா - Esplanade இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி நதிக்கடியில் 520-மீட்டர் தொலைவு வரையில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தை 45 நிமிடங்களில் கடக்கும்.

  இந்த ரயில் பாதை கிழக்கு - மேற்கு மெட்ரோ காரிடரை இணைப்பதுடன் ஹவுரா மைதான் மற்றும் சால்ட் லேக் செக்டார் 5-வழியாக சென்று கொல்கத்தாவின் ஐ.டி. ஹப் பகுதி வரை செய்கிறது. பல்வேறு தடங்களுக்கு இடையே, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஹூக்ளி நதிக்கு கீழே மெட்ரோ இரயில் திட்டம் செயல்படுத்தப்படுவது என்பது புரட்சிகரமானதும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் வாசிக்க..

Soppana Sundari Review: காருக்காக நடக்கும் போர்..இறுதியில் வென்றது யார்? சொப்பன சுந்தரி படத்தின் விமர்சனம் இதோ..!

CSK vs RR Playing XI: போல்ட் இல்லாத ராஜஸ்தான்.. சாண்ட்னர் இல்லாத சென்னை.. என்ன செய்யப்போகிறது இரு அணிகள்? ப்ளேயிங் லெவன் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget